2வது வார ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு எதிரொலி கோபாலப்பட்டிணம் & மீமிசலில் வெறிச்சோடி காணப்பட்ட சாலைகள்




தமிழகத்தில் நேற்று மே 2  இரண்டாவது வாரமாக முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. ஆனாலும் நேற்று வாக்கு எண்ணிக்கை நடப்பதால் வேட்பாளர்கள், தேர்தல் முகவர்கள், வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடுபவர்களுக்கு தடையில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது

கொரோனவை கட்டுப்படுத்த வேண்டும் என்பதால் தமிழக அரசு சுமார் ஏழு மாதங்களுக்கு பிறகு ஊரடங்கு என்னும் ஆயுதத்தை கையில் எடுத்தது. தினமும் இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை இரவு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இது தவிர வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்றும் தமிழக அரசு அறிவித்தது

அதன்படி கடந்த வாரம் முழு ஊரடங்கு போடப்பட்டது. இந்த நிலையில் நேற்று இரண்டாவது வாரமாக முழு ஊரடங்கு போடப்பட்டுள்ளது. சனிக்கிழமை இரவு 10 மணிக்கு தொடங்கிய முழு ஊரடங்கு திங்கட்கிழமை காலை 4 மணி வரை 30 மணி நேரம் அமலில் இருக்கும். இந்த நிலையில் தமிழகத்தில்  அத்தியாவசிய பணிகளை தவிர வேறு எவற்றுக்கும் அனுமதி கிடையாது. நேற்று தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றதால் வேட்பாளர்கள், தேர்தல் முகவர்கள், வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடுபவர்களுக்கு, பத்திரிகையாளர்களுக்கு எந்த வித தடையும் விதிக்கப்படவில்லை.

இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டம்  கடற்கரை நகரமான   
கோபாலப்பட்டிணம்  & மீமிசலில் நேற்று 02.05.2021 ஞாயிற்றுக்கிழமை பொதுமுடக்கம் காரணமாக  முக்கிய சாலைகளில் மற்றும் வீதியில்  மக்கள் நடமாட்டம் இல்லாமல் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டது. 

மீமிசல்

மீமிசலில் ECR சாலையில் வாகனப் போக்குவரத்தின்றி சாலைகள் வெறிச்சோடிக் காணப்பட்டன. பேருந்து நிலையம் அருகில் இருக்கும் மீன் மார்க்கெட் மற்றும் காய்கறி மார்க்கெட்டில் கடைகள் அடைக்கப்பட்டு மக்கள் இல்லாத நிலையில் வெறிச்சோடி காணப்பட்டது.





மீமிசல் கடைவீதியில் அத்தியாவசிய தேவைகளான பால் கடைகள், மருந்தகங்கள் மட்டுமே திறந்திருந்தன. காய்கறி கடைகள், மளிகைக் கடைகள்,  உட்பட அனைத்து கடைகளும் மூடப்பட்டிருந்தன. உணவகங்களில் பார்சல் மட்டும் வழங்கப்பட்டன.

கோபாலப்பட்டிணம்

கோபாலப்பட்டிணத்தில்  முழு நேர ஊரடங்கை தொடர்ந்து  கடைகள்  திறக்கப்படவில்லை, மீனவர்கள் கடலுக்குச் செல்லவில்லை, இதனால்  , ECR சாலை, மற்றும் கடற்க்கரை வெறிச்சோடின. ஊரடங்கின் காரனமாக பள்ளிவாசலில் ஐவேளை தொழுகை , தராவிஹ்  தொழுகை, இப்தார் அவர் அவர் வீடுகளில் தொழுகை , நிறைவேற்றிக்கொண்டனர் .







ஊரடங்கு உத்தரவை மதித்து பொதுமக்கள் தங்களது வீடுகளிலேயே தங்கி இருந்தனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments