அறந்தாங்கி காங்கிரஸ் வேட்பாளா் T.ராமசந்திரன் 30,893 வாக்குகள் வித்தியாசத்தில் அமோக வெற்றி! (வாக்கு எண்ணிக்கை முழு விவரம்)



புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி சட்டப்பேரவைத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளா் T.ராமசந்திரன் 30,893 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளாா்.

தமிழ்நாட்டில் சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு நள்ளிரவு வரை நடைபெற்று வந்தது. 234 தொகுதிகளிலும் பதிவான வாக்குகள் மொத்தம் உள்ள 75 மையங்களில் எண்ணப்பட்டது.

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதியின் (183) வாக்கு எண்ணிக்கை புதுக்கோட்டை மகளிர் கல்லூரியில் நடைபெற்றது.

அறந்தாங்கி சட்டமன்ற தொகுதியில் ஆண்கள் 1,16,883, பெண்கள்- 1,19,151 மூன்றாம் பாலினத்தவா்- 6, மொத்தம்- 2,36,040 வாக்காளா்கள் உள்ளனர்.

அறந்தாங்கி தொகுதியில் கடந்த மாதம் ஏப்ரல் 6 அன்று நடைபெற்ற வாக்குபதிவில் 1,66,685 (70.37%) வாக்குகள் பதிவாகியது.

அறந்தாங்கி சட்டப்பேரவைத் தொகுதியில் காங்கிரஸ் சாா்பில் போட்டியிட்ட T.ராமசந்திரன் 81,835 வாக்குகள் பெற்றுள்ளாா். அதிமுக சாா்பில் போட்டியிட்ட M.ராஜநாயகம் 50,942 வாக்குகள் பெற்றாா்.

28 சுற்றுக்களாக நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் தொடக்கம் முதலே தொடா்ந்து, முன்னிலை வகித்து வந்த T.ராமசந்திரன் 30,893 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளாா். 

அமமுக வேட்பாளா் சிவசண்முகம் 4,699, மக்கள் நீதி மய்யம் வேட்பாளா் சேக் முகமது 966, நாம்தமிழா் வேட்பாளா் MI.ஹீமாயூன் கபீர் 18,460 வாக்குகள் பெற்றனா். அறந்தாங்கி சட்டப்பேரவைத் தொகுதியில் நாம் தமிழா் கட்சி 18,460 வாக்குகள் பெற்று 3-வது இடத்தைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

மொபைல் பிரவுசரில் டெஸ்க்டாப் வியூ (Desktop Site) வைத்து பார்க்கவும்.. அல்லது மொபைலை திருப்பி வைத்து பார்க்கவும்..

வ.

எண்

வேட்பாளர் பெயர்

EVM வாக்கு

தபால் வாக்கு

மொத்த

வாக்கு

% சதவிகிதம்

1.

ராமசந்திரன் (காங்கிரஸ்) வெற்றி

80902

933

81835

48.7

2.

ராஜநாயகம் (அ.தி.மு.க)

50655

287

50942

30.31

3.

ஜுவா (பகுஜன் சமாஜ்)

633

3

636

0.38

4.

அமலதாஸ் சந்தியாகு (பு.த)

599

13

612

0.36

5.

ராமலிங்கசாமி ஆதித்தன் (....)

167

1

168

0.1

6.

குமரப்பன் (மை இந்தியா பார்ட்டி)

125

0

125

0.07

7.

சக்திவேல் (.மு..)

162

0

162

0.1

8.

சிவசண்முகம் (அ.ம.மு.க)

4678

21

4699

2.8

9.

சேக் முகமது (.நீ.)

960

6

966

0.57

10.

ஹீமாயுன்கபீர் (நா..)

18398

62

18460

10.98

11.

அர்ச்சுணன் (சுயேச்சை)

140

0

140

0.08

12.

சையது சுல்தான் இப்ராஹிம் (சுயே)

201

1

202

0.12

13.

செல்வகுமார் (சுயேச்சை)

391

0

391

0.23

14.

தில்லைநாதன் (சுயேச்சை)

179

1

180

0.11

15.

தெட்சிணாமூர்த்தி (சுயேச்சை)

1064

16

1080

0.64

16.

பாண்டியன் (சுயேச்சை)

505

0

505

0.3

17.

மகேந்திரன் (சுயேச்சை)

493

0

493

0.29

18.

முத்துகருப்பையா (சுயேச்சை)

334

0

334

0.2

19.

முத்துசெல்வம் (சுயேச்சை)

2159

5

2164

1.29

20.

ராமசாமி (சுயேச்சை)

212

0

212

0.13

21.

வேல்ராஜ் (சுயேச்சை)

3150

14

3164

1.88

22.

ஜெகதீசன் (சுயேச்சை)

54

0

54

0.03

23.

NOTA (None of the Above)

524

0

524

0.31

மொத்தம்

166685

1363

168048

 



எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments