ஆலங்குடி மின்மாற்றியில் தீப்பிடித்து எரிந்தது
ஆலங்குடி-ஆதனக்கோட்டை செல்லும் சாலையில் நம்பன்பட்டி அருகேயுள்ள தனியார் நவீன அரிசி ஆலை அருகே மின்வாரிய மின்மாற்றி ஒன்று உள்ளது. இந்த மின்மாற்றியில் நேற்று திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதைப்பார்த்த அக்கம்பக்கம் உள்ளவர்கள் ஆலங்குடி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில், நிலைய அலுவலர் சரவணகுமார் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் அங்கு சென்றனர். இதற்கிடையே மீன்வாரிய பணியாளர்கள் மின்மாற்றியிலிருந்து செல்லும் மின் இணைப்புகளை துண்டித்தனர். இதையடுத்து தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். அதிர்ஷ்டவசமாக மின்மாற்றி வெடிக்கவில்லை. 
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments