புதுக்கோட்டை மாவட்டத்தில் முதல் முறையாக 2 பேருக்கு அமைச்சர் பதவி: திமுகவினர் உற்சாகம்
புதுக்கோட்டை மாவட்டத்தில் முதல் முறையாகத் திமுக ஆட்சியில் 2 பேருக்கு அமைச்சர் பதவி கிடைத்துள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் மொத்தம் உள்ள 6 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 5 தொகுதிகளை திமுக கூட்டணியும், ஒரு தொகுதியை அதிமுகவும் கைப்பற்றியது.திருமயம் தொகுதியில் வெற்றி பெற்றுள்ள எஸ்.ரகுபதிக்கு சட்டத்துறை அமைச்சர் பதவி கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பு அதிமுக சார்பில் கடந்த 1991-96 காலகட்டத்தில் திருமயம் தொகுதியில் சட்டப்பேரவை உறுப்பினராக வெற்றி பெற்ற இவர், தொழிலாளர் நலத்துறை, வீட்டு வசதி வாரியத்துறை அமைச்சராக இருந்தார்.

அதன்பிறகு, திமுகவில் இணைந்த எஸ்.ரகுபதி, 2004- 2009 காலகட்டத்தில் புதுக்கோட்டை மக்களவைத் தொகுதியில் வெற்றி பெற்றதையடுத்து, மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை இணை அமைச்சராக இருந்தார். அதன்பிறகு, கடந்த 2016-ல் திருமயம் தொகுதி எம்எல்ஏவாக இருந்தார். இந்நிலையில் தற்போது அவருக்கு சட்டத்துறை அமைச்சர் பதவி கொடுக்கப்பட்டுள்ளது.

இதேபோன்று, ஆலங்குடி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக வெற்றி பெற்றுள்ள சிவ.வீ.மெய்யநாதனுக்கு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்பு 1996 முதல் 2006 வரை தனது சொந்த ஊரான மறமடக்கி ஊராட்சி மன்றத் தலைவராகவும், 2006 முதல் 2016 வரை திமுக சார்பில் அறந்தாங்கி ஒன்றியக் குழுத் தலைவராகவும் மெய்யநாதன் இருந்தார். அதன்பிறகு, 2016-ல் ஆலங்குடி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக இருந்தார்.

தற்போது அமைச்சராகியுள்ள எஸ்.ரகுபதி, சிவ.வீ.மெய்யநாதன் ஆகிய 2 பேருமே 3 தொகுதிகளை உள்ளடக்கியுள்ள திமுக தெற்கு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

புதுக்கோட்டை மாவட்டத்துக்கு அதிமுக ஆட்சியில் ஒரே நேரத்தில் 2 பேருக்கு அமைச்சர் பதவி கொடுக்கப்பட்டிருந்தாலும்கூட, திமுக ஆட்சியில் ஒரே நேரத்தில் இருவருக்கு அமைச்சர் பதவி கொடுக்கப்பட்டுள்ளது இதுவே முதல் முறையாகும்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

1 Comments

  1. அப்படியென்றால் திமுக விற்கு முன்பாகவே அதிமுக 2 அமைச்சர் பதவி கொடுத்திருக்கிறது. அப்படியென்றால் திமுக தாமதமாகத்தான் கொடுத்திருக்கிறது. Any way congratulations for DMK and public are highly expecting good politics management from the DMK government. We hope CM Stalin will do satisfy and successful government.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.