சி.ஏ.ஏ. சட்டத்தை அமல்படுத்தும் மோடி அரசு! ஜூன் 01ல் வீடுகள் தோறும் நமது எதிர்ப்புகளை பதிவு செய்வோம்!
நாடு பெருந்துன்பத்தில் தவித்துக் கொண்டிருக்கும் பெருந்தொற்றுக்கு நடுவே, தனது மோசமான ஆட்சி நிர்வாகத்தால் நாட்டு மக்களிடம் அம்பலப்பட்டு நிற்கும் மோடி அரசு, அதனை திசைதிருப்பும் வகையில், சிஏஏ எனும் குடியுரிமை திருத்தச் சட்டத்தை அமல்படுத்தும் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

தங்களின் ஆட்சி நிர்வாகத் தோல்வியை மறைக்க குடியுரிமை போன்ற சர்ச்சைக்குரிய விசயங்களை தூண்டும் மத்திய அரசின் இந்த அபத்தமான நடவடிக்கைகளுக்கு எதிராக, ஜூன் 01 அன்று நாடு தழுவிய போராட்டத்திற்கு எஸ்.டி.பி.ஐ. கட்சியின் தேசிய தலைமை அழைப்பு விடுத்துள்ளது.

அதன்படி அன்றைய தினம் கட்சியின் உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களும் தங்கள் வீடுகளில் பதாகைகள், சுவரொட்டிகளை ஏந்தி, சி.ஏ.ஏ. சட்டத்தை அமல்படுத்தும் மத்திய அரசின் அறிவிப்புக்கு எதிராக போராட்டம் நடத்த வேண்டும். மேலும், ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்களில் நடைபெறும் எதிர்ப்பு பிரச்சாரத்திலும் கலந்துகொண்டு தங்களின் எதிர்ப்புகளை பதிவு செய்ய வேண்டும் என வலியுறுத்திக் கேட்டுக்கொள்கின்றேன்.

இப்படிக்கு

நிஜாம் முகைதீன்
மாநில பொதுச்செயலாளர்
SDPI கட்சி, தமிழ்நாடு.

தகவல்

மு.மு.ஹனிபா  புதுக்கோட்டை
கிழக்கு மாவட்ட 
பொதுச்செயலாளர்
SDPI கட்சி,

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments