கோபாலப்பட்டிணத்தில் தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் மூன்றாம் நாளாக பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீர் வினியோகம்


கோபாலப்பட்டிணத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் மூன்றாம் நாளாக பொதுமக்களுக்கு   கபசுர குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது.

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் ஒன்றியம் நாட்டானிபுரசக்குடி ஊராட்சிக்கு உட்பட்ட மீமிசல் அருகேயுள்ள   கோபாலப்பட்டிணத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் மே 30 இன்று தவ்ஹீத் மர்கஸ் அருகிலும் மற்றும் மீமிசல் பகுதியில் காவல் நிலையம் மற்றும் பாதசாரிகளுக்கும்  கபசுரக் குடிநீர் மூன்றாம் நாளாக
பொதுமக்களுக்கு கொடுக்கப்பட்டது.

இதில் 250 பேர் பயன் அடைந்தனர்

இதில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோபாலப்பட்டினம் செயலாளர் செய்யது இபுராஹிம் பொருளாளர் மஹாதீர் முகமது மற்றும்  தொண்டரணி முகம்மது ஹூசைன் மருத்துவணி ரியாஸ் கான் ஆகியோர்கள் கலந்து கொண்டனர்...

சுகாதார துறை அறிவுறுத்தல் அடிப்படையில் தொடர்ந்து மூன்று நாட்கள் கபசூரக் குடிநீர் அருந்த வேண்டும் அதனடிப்படையில் நாளையும் தவ்ஹீத் மர்கஸ் அருகில் கபசூரக் குடிநீர் விநியோகம் செய்யப்படும்...நேற்றும் கொடுக்கப்பட்டது.

கொரேனா என்னும் இந்தக் கொடிய வைரஸ் நோய் தொற்று வராமல் இருக்க முககவசம் அணிந்து சமூக இடைவெளியை பின்பற்றி இருந்து கொள்ளுங்கள்.  மக்கள் அவசியமின்றி வீட்டைவிட்டு வெளியே வருவதையும் தவிர்த்துக்கொள்ளுங்கள்.

என்றும் சமுதாயப் பணியில்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோபாலப்பட்டினம் கிளை புதுக்கோட்டை மாவட்டம்
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments