கோபாலப்பட்டிணம் பகுதிகளில் பொதுக் குடிநீர் விநியோகத்தைச் சீராகப் பராமரிக்கும் நோக்கில், ஊராட்சி மன்ற செயலாளர் சார்பில் பொதுமக்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி, புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் ஒன்றியம் நாட்டாணிபுரசக்குடி ஊராட்சியை சேர்ந்த கோபாலப்பட்டிணத்தில் உள்ள வீடுகளில் யாரேனும் சட்டவிரோதமாக மோட்டார் பொருத்தி குடிநீரை உறிஞ்சுவது தெரியவந்தால், பொதுமக்கள் உடனடியாக ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு நேரில் வந்து ஊராட்சி மன்றச் செயலாளரிடம் தகவல் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
பொதுமக்கள் கொடுக்கும் புகார்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டு, சட்டவிரோத மோட்டார் பயன்பாடு உண்மையாகும் பட்சத்தில், சம்பந்தப்பட்ட வீட்டின் குடிநீர் ரசீது உடனடியாக ரத்து செய்யப்படும். மேலும், அந்த வீட்டிற்கான குடிநீர் இணைப்பு நிரந்தரமாகத் துண்டிக்கப்பட்டு, மீண்டும் குடிநீர் வழங்கப்படமாட்டாது என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
அதேவேளையில், இதுகுறித்து ஊராட்சி மன்றச் செயலாளரிடம் தகவல் அளிக்கும் பொதுமக்களின் பெயர் மற்றும் முகவரி உள்ளிட்ட விவரங்கள் முற்றிலும் ரகசியமாகப் பாதுகாக்கப்படும் என்றும் உறுதி அளிக்கப்பட்டுள்ளது. எனவே, குடிநீர் திருட்டைத் தடுக்க கோபாலப்பட்டிணம் பொதுமக்கள் அனைவரும் ஊராட்சி மன்ற நிர்வாகத்திற்கு முழு ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
எங்களுடன் இணைந்திருங்கள்
எங்களுடைய செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள பின்தொடருங்கள்:

0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.