நாளை (ஜூலை.29) முதல் மறு அறிவிப்பு வரை மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம்: புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை!



கடல் பகுதியில் காற்றின் வேகம் அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுவதால், புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த நாட்டுப்படகு மற்றும் விசைப்படகு மீனவர்கள் நாளை 29.07.2026 முதல் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லக் கூடாது என மீன்வளத்துறை எச்சரித்துள்ளது.

பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, மீனவர்கள் அனைவரும் தங்களது விசைப்படகுகள் மற்றும் நாட்டுப்படகுகளைப் பாதுகாப்பான இடங்களில் கரையேற்றி வைக்குமாறும், வலைகள் உள்ளிட்ட மீன்பிடி உபகரணங்களை பத்திரப்படுத்திக் கொள்ளுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 

மறு உத்தரவு வரும் வரை மீனவர்கள் யாரும் மீன்பிடிக்கக் கடலுக்குச் செல்ல வேண்டாம் என மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

 

எங்களுடன் இணைந்திருங்கள்

எங்களுடைய செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள பின்தொடருங்கள்:


Post a Comment

0 Comments