புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா நிவாரண நிதிக்கான டோக்கன் வினியோகம் தொடங்கியது. ரேஷன் கடைகளில் ரூ.2 ஆயிரம் வருகிற 15-ந் தேதி முதல் வினியோகிக்கப்பட உள்ளது.
கொரோனா நோய் தொற்று காரணமாக பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ள சிரமங்களை குறைக்கும் வகையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்த பொது வினியோகத்திட்ட அரிசி பெறும் குடும்ப மின்னணு குடும்ப அட்டை வைத்துள்ள அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.2 ஆயிரம் வீதம் நிவாரணத் தொகை முதல் தவணையாக வருகிற 15-ந் தேதி முதல் அந்தந்த ரேஷன் கடைகளில் டோக்கன்களில் குறிப்பிட்டுள்ள நாள் மற்றும் நேரத்தில் வழங்கப்பட உள்ளது.
கொரோனா நிவாரணத் தொகையினை முதல் தவணையாக வழங்க தொடர்புடைய ரேஷன் கடைகள் மூலமாக புதுக்கோட்டை மாவட்டத்தில் புழக்கத்தில் உள்ள 4 லட்சத்து 65 ஆயிரத்து 947 அரிசி பெறும் மின்னணு குடும்ப அட்டைதாரர்களுக்கு (இலங்கை அகதிகள் முகாமில் வசிக்கும் குடும்பங்கள் உள்பட) தமிழக அரசால் வழங்கப்பட உள்ளது.
தற்போது நடைமுறையிலுள்ள அனைத்து அரிசி பெறும் மின்னணு குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் விடுதலின்றி கொரோனா நிவாரணத் தொகை ரூ.2 ஆயிரம் பெறுவதற்கு ரேஷன் கடைகள் காலை 8 மணி முதல் நண்பகல் 12 மணி வரை மட்டும் செயல்பட அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா நிவாரண தொகையினை முறைப்படுத்தும் வகையில் தெரு வாரியாக உள்ள குடும்ப அட்டைகளின் எண்ணிக்கையின் அடிப்படையில் நாள் ஒன்றுக்கு 200 குடும்ப அட்டைகளுக்கு மிகாமல் வழங்குவதற்கு நாள் நேரம் போன்ற விவரங்கள் குறிப்பிட்டு டோக்கன்கள் வழங்கும் பணி நேற்று முதல் தொடங்கியது. வீடு, வீடாக சென்று டோக்கன்களை ரேஷன் கடை ஊழியர்கள் வழங்கினர். நாளை (புதன்கிழமை) டோக்கன் வழங்க மாவட்ட நிர்வாகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
குடும்ப அட்டை இல்லாத இனங்களில் e-pos Device மூலம் கொரோனா வைரஸ் நிவாரண உதவித்தொகை முதல் தவணை வழங்கப்படும். இதற்கான உரிய பதிவுகள் ஒப்புதல் படிவத்தில் பதிவுத்தாளில் குறிப்பிடப்பட வேண்டும். கொரோனா வைரஸ் நிவாரண உதவி தொகை முதல் தவணையாக ரூ.2 ஆயிரம் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்டதும் அவர்களின் செல்போன் எண்ணிற்கு குறுஞ்செய்தி அனுப்பப்படும். கொரோனா தொற்றிலிருந்து பொதுமக்கள் தங்களை தற்காத்து கொள்ளும் பொருட்டு 2 மீட்டர் இடைவெளியில் சமூக இடைவெளியை கடைப்பிடித்து நிவாரண உதவித்தொகையை பெற்று செல்ல வேண்டும். மேலும் குடும்ப அட்டைதாரர்கள் ரேஷன் கடைக்கு செல்லும் போது கண்டிப்பாக முக கவசம் அணிந்து செல்ல வேண்டும்.
செல்போன் எண்கள்
புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா நிவாரண உதவித்தொகை தொடர்பான புகார்கள் ஏதுமிருப்பின் தனி வட்டாட்சியர், புதுக்கோட்டை 9445000312, தனி வட்டாட்சியர், ஆலங்குடி 9445000313, வட்ட வழங்கல் அலுவலர், குளத்தூர் 9445000314, வட்ட வழங்கல் அலுவலர் கந்தர்வகோட்டை 9445000315, வட்ட வழங்கல் அலுவலர் திருமயம், 9445000316, தனி வட்டாட்சியர், அறந்தாங்கி 9445000317, வட்ட வழங்கல் அலுவலர் ஆவுடையார்கோவில், 9445000318, வட்ட வழங்கல் அலுவலர் மணமேல்குடி 9443870034, 9445000320, வட்ட வழங்கல் அலுவலர் பொன்னமராவதி 9445000404, வட்ட வழங்கல் அலுவலர் கறம்பக்குடி 9445000405, வட்ட வழங்கல் அலுவலர் இலுப்பூர் 9445000319, வட்ட வழங்கல் அலுவலர் விராலிமலை 9080487553 என்ற செல்போன் எண்களில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என கலெக்டர் உமாமகேஸ்வரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
விராலிமலை பகுதியில் உள்ள ரேஷன் கடை பணியாளர்கள் மூலம் குடும்ப அட்டைதாரர்கள் வீடுகளுக்கு சென்று முதற்கட்டமாக ரூ.2 ஆயிரம் பெறுவதற்கான டோக்கன் வினியோகம் செய்யப்பட்டது. இந்த டோக்கனை பெற்றவர்கள் வரும் 15-ந்தேதி முதல் வரிசைப்படி பெற்றுக்கொள்ளலாம். திருவரங்குளம் வட்டார பகுதியில் பொதுமக்கள் ரூ.2 ஆயிரம் பெறுவதற்கான டோக்கனை ரேஷன் கடை ஊழியர்கள் வழங்கினர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.