புதுக்கோட்டை மாவட்டத்தில் தாலுகா அரசு மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன் வசதியுடன் படுக்கைகளை ஏற்படுத்த SDPI வலியுறுத்தல்!எஸ் டி பி ஐ கட்சி புதுக்கோட்டை மாவட்ட பொதுச்செயலாளர் Dr.மு.மு.ஹனிபா வலியுறுத்தியுள்ளார்.

புதுக்கோட்டை  மாவட்டத்தில்  அதிகரிக்கும் கொரோனா பெருந்தொற்று:

இது தொடர்பாக எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாவட்ட பொதுச்செயலாளர்  Dr.மு.மு.ஹனிபா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் தொடர்ந்து  கொரோனா பெருந்தொற்று அதிகரித்து வரும் நிலையில் மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதி மக்களும் கொரோனா பெருந்தொற்று மேல் சிகிச்சைக்காக புதுக்கோட்டையில் உள்ள புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவனையையே நம்பி உள்ளனர். மேலும் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் வயது மூத்த முதிய கொரோனா நோயாளிகளை தனியார் மருத்துவமனை நிர்வாகம் சிகிச்சைக்கு அனுமதிப்பதில்லை. ஆகையால் வயது மூத்த முதிய கொரோனா நோயாளிகளும் புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவனையையே நம்பி உள்ளனர். இதனால் புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவனையில் ஆக்ஸிஜன் வசதி உள்ள படுக்கைகள் நிரம்பி உள்ளன.

ஆகவே இதனை போக்கும் விதமாக  அனைத்து தாலுகா அரசு மருத்துவ மனைகளிலும் ஆக்ஸிஜன் வசதி உள்ள படுக்கைகள் மற்றும் அவசர சிகிச்சை பிரிவுகளையும் போர்கால அடிப்படையில் அமைத்திட தமிழக அரசை அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments