கோபாலப்பட்டிணத்தில் என்றும் உதவும் கரங்கள் சார்பில் பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீர் வினியோகம்!கோபாலப்பட்டிணத்தில் என்றும் உதவும் கரங்கள் சார்பில் பொதுமக்களுக்கு  2 இடங்களில் கபசுர குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது.

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் ஒன்றியம் நாட்டானிபுரசக்குடி ஊராட்சிக்கு உட்பட்ட மீமிசல் அருகேயுள்ள   கோபாலப்பட்டிணத்தில் 
என்றும் உதவும் கரங்கள் சார்பில்  இன்று மே 17 காலை 6 மணி முதல் 10 மணி வரை  2 இடங்களில் கபசுரக் குடிநீர் பொதுமக்களுக்கு கொடுக்கப்பட்டது. 

கொடுக்கப்பட்ட இடங்கள்

* பெரிய பள்ளி அருகில் 
கபசுரக் குடிநீர் பொதுமக்களுக்கு கொடுக்கப்பட்டது.இதில் 300 பேர் பயன் அடைந்தனர்.

*காட்டுபள்ளி அருகில் கபசுரக் குடிநீர் பொதுமக்களுக்கு கொடுக்கப்பட்டது.
200 பேர் பயன் அடைந்தனர்.
கோபாலப்பட்டிணம் பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீர் வினியோகம் செய்த என்றும் உதவும் கரங்கள் அறக்கட்டளை உறுப்பினர்களுக்கு GPM மீடியா சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம்.

கொரேனா என்னும் இந்தக் கொடிய வைரஸ் நோய் தொற்று வராமல் இருக்க முககவசம் அணிந்து சமூக இடைவெளியை பின்பற்றி இருந்து கொள்ளுங்கள்.  மக்கள் அவசியமின்றி வீட்டைவிட்டு வெளியே வருவதையும் தவிர்த்துக்கொள்ளுங்கள்.

தகவல்:
என்றும் உதவும் கரங்கள் அறக்கட்டளை
கோபாலப்பட்டிணம்.
புதுக்கோட்டை மாவட்டம்

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments