அறந்தாங்கியில் ஊரடங்கை மீறி திறந்த 2 மளிகை கடைகளுக்கு `சீல்'


அறந்தாங்கியில் ஊரடங்கை மீறி திறந்த 2 மளிகை கடைகளுக்கு `சீல்' வைக்கப்பட்டது.

கொரோனா தொற்றை குறைக்க தமிழக அரசு தளர்வு இல்லாத ஊரடங்கை பிறப்பித்து உள்ளது. இந்நிலையில் நேற்று அறந்தாங்கி எல்.என்.புரம் பகுதியில் ஊரடங்கை மீறி மளிகை கடைகள் திறக்கப்பட்டு வியாபாரம் செய்யப்பட்டு வருவதாக அறந்தாங்கி தாசில்தார் மார்ட்டின் லூதர் கிங்கிற்கு தகவல் கிடைத்துள்ளது.
 
இதையடுத்து எல்.என்.புரம் பகுதியில் ஆய்வு மேற்கொண்ட போது அப்பகுதியை சேர்ந்த கண்ணன், சுரேஷ் ஆகிய இருவரும் மளிகை கடைகளை திறந்து வியாபாரம் செய்துவந்தது தெரியவந்தது.
 
இதையடுத்து 2 மளிகை 
கடைகளையும் பூட்டி அதிகாரிகள் `சீல்' வைத்தனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments