ஜமாத் கூட்டமைப்பு (ஆயப்பாடி, திருக்களாச்சேரி, பெரியகூத்தூர், எ.சாத்தனூர், பிலால்நகர்) சார்பில் மரணம் அடைந்தவர்கள் எவ்வாறு அடக்கம் செய்ய வேண்டும்: வழிகாட்டி முறைகள் வெளியீடு!!


மயிலாடுதுறை மாவட்டம் பொறையார் அருகே உள்ள
ஆயப்பாடி, திருக்களாச்சேரி, பெரியகூத்தூர்,  எ.சாத்தனூர், பிலால்நகர் ஜமாஅத் கூட்டமைப்பு சார்பில் மரணம் அடைந்தவர்கள் எவ்வாறு அடக்கம் செய்ய வேண்டும் வழிகாட்டி முறைகள் வெளியிடு உள்ளார்கள்.

2021 மே மாதம் 27ம் தேதி ஐந்தூர் ஜமாத்து கூட்டமைப்பு முத்தவல்லிகள், நிர்வாகிகள் மற்றும் முக்கியஸ்தர்கள் அனைவரும் பொது மக்கள் நலன் கருதி கீழ்கான தீர்மானங்கள் எடுக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டது

கொரானா நோய் பெருந்தொற்று அதிகம் பரவுதல் காரணமாக அரசாங்கம் வழிவகுத்துள்ள நடைமுறை காலம் முடியும் வரை ஐந்தூர் முஹல்லாவின் ஜம்மாத்துக்குட்பட்ட பகுதியில் இறப்பு (மரணம்) நடந்தால் அவர்கள் எந்த மாதிரியான இறப்பை (மரணத்தை) சந்தித்திருந்தாலும் அவர்களை குளிபாட்டி அடக்கம் செய்யும் வரையில் ஐந்தூர் ஐமாத்து கூட்டமைப்பு முத்தவல்லி. நிர்வாகிகள் ஒன்று கூடி முடிவு எடுத்தபடிதான் இறுதி சடங்கு செய்து அடக்கம் செய்ய வேண்டும் என்று முடிவு செய்யபட்டது.

கீழ்கான சரத்தின்படி அடக்கம் செய்யவேண்டும்.

1. இறந்தவர் கொரானா பாஸிடிவ் இருந்து மரணித்தால் அரசு காட்டும் வழிமுறை படி அடக்கம் செய்யபடும்

2. கொரானா பாஸிடிவ் அறியாமல், மற்ற நோயின் காரணமாகவோ, வயது மூப்பு காரணமாகவோ மரணித்திருந்தால் மையத்தை குளிப்பாட்டுபவர்கள் பாதுகாப்பு கவச உடை அனிந்து குளிப்பாட்டபடுவார்கள்.

3. இறுதி சடங்கிற்கான பணிகள் நடைபெறும் நான்கு மணி நேரத்திற்குள் அடக்கம் செய்ய வேண்டும்.

4.. ஜனாஸாவை ஒருமுறை குளிப்பாட்டி கபனிட்டு அடக்கம் செய்ய போதுமானது

5. வெளியூர் உறவினர்களுக்கு தகவல் அளித்தால் மட்டும் போதுமானது

6. கூட்டம் கூட அரசு தடை விதித்து இருப்பதால் உறவினர்கள் வரும்வரை எதிர்பார்க்க கூடாது.

7. மரண அறிவிப்புகளை அவர்கள் சார்ந்த முஹல்லாயில் மட்டும் அறிவிப்பு செய்தால் போதும்,

மேற்கண்ட தீர்மானங்கள்  அனைத்தையும் உறிதியாக அனைவரும் கடைபிடிக்க வேண்டுமென்று ஐந்தூர் ஜமாத்து கூட்டமைப்பு முத்தவல்லி. நிர்வாகிகள் ,நிர்வாகத்தின் சார்பாக கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இப்படிக்கு

ஆயப்பாடி,

திருக்களாச்சேரி,
 
பெரியகூத்தூர், 
 
எ.சாத்தனூர்,

பிலால்நகர்

தலைவர். ஜனாப் M.முஹமது ரஃபிக், முத்தவல்லி, திருக்களாச்சேரி,ஜாமிஆ மஸ்ஜித் வக்ஃபு நிர்வாக சபை,

செயலாளர்; ஜனாப் M.ஜியாவுதீன், செயலாளர், ஆயப்பாடி, ஜாமி.ஆ மஸ்ஜித் வக்ஃபு நிர்வாக சபை,

பொருளாளர்) ஜனாப் M.சிராஜுதீன், பொருளானர், பெரிய கூத்தூர், ஜாமிஆ மஸ்ஜித் வகப்பு நிர்வாக சபை,

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments