திடீரென 50 அடி தூரத்துக்கு உள்வாங்கிய கோட்டைப்பட்டினம் கடல்



புதுக்கோட்டை மாவட்ட கடலோர பகுதியில் நேற்று முன்தினம் இரவு பலத்த காற்று வீசியது. இதனால் கோட்டைப்பட்டினம் மீன்பிடித் துறைமுகத்தில் உள்ள மின்கம்பங்கள் சாய்ந்தன. மேலும் விசைப்படகுகள் காற்றில் இழுத்துச் செல்லப்பட்டன. இந்நிலையில் நேற்று காலை சுமார் 50 அடி தூரத்துக்கு கடல் உள்வாங்கியது. இதனால் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த நாட்டுப் படகுகள் தரை தட்டி நின்றன. பின்னர் மீனவர்கள் அதனை தள்ளிச்சென்று கடலுக்குள் நிறுத்தினர். 

இதனிடையே சில மணிநேரத்துக்கு பிறகு கடல் சகஜநிலைக்கு திரும்பியது. மேலும் இப்பகுதி மீனவர்கள் கடற்கரையில் பாசி வளர்ப்பு தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் கடல் திடீரென உள்வாங்கியதால் பாசிகள் மேலே மிதந்து அழுகியது. இதனால் மீனவர்கள் கவலை அடைந்தனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments