வடக்கம்மாப்பட்டினத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி(மார்க்சிஸ்ட்) சார்பில் கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம்!










மத்திய அரசு கொண்டு வந்துள்ள மூன்று வேளாண் விரோத சட்டங்களுக்கு எதிராக கடந்த ஆண்டு நவம்பர் 26ம் தேதி முதல் டெல்லி எல்லைகளில் நாடு முழுவதிலிருந்தும் திரண்ட விவசாயிகள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.

அவர்களின் போராட்டம் தொடங்கி இன்றுடன் 6 மாதம் நிறைவடைந்ததையும் பிரதமர் மோடி முதல் தடவையாக பிரதமராக பதவியேற்ற 26/5/2014 நாளின் 7ஆம் ஆண்டு நிறைவு இரண்டையும் இணைத்து 26/6/2021 அன்றைய தினத்தை தேசிய கருப்பு நாளாக அனுசரிக்க நாடு முழுக்க உள்ள மக்களுக்கு டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் அறைகூவி அழைத்ததின் பேரில் நாடு முழுவதும் நேற்று பெருவாரியான மக்களால் தேசிய கருப்பு நாள் கடைபிடிக்கப்பட்டு மத்திய மோடி அரசுக்கு எதிராக தங்கள் எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி வட்டம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி(மார்க்சிஸ்ட்) வடக்கம்மாப்பட்டினம் கிளை சார்பாக வடக்கம்மாப்பட்டினத்தில் வீடுகளில் கருப்பு கொடி ஏற்றியும், சமூக இடைவெளியோடு கூடி தோழர்கள் மத்திய மோடி அரசின் மீதான தங்கள் எதிர்ப்புகளை கருப்பு கொடி ஏந்தி,முழக்கமிட்டு போராடும் விவசாயிகள் விடுத்த அறைகூவலுக்கு  தங்கள் ஆதரவை அளித்தனர்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி(மார்க்சிஸ்ட்) வடக்கு அம்மாப்பட்டினம்-மணமேல்குடி கிளை
புதுக்கோட்டை மாவட்டம்

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments