புதுக்கோட்டை மாவட்டத்தில் 7 பேருக்கு கருப்பு பூஞ்சை தொற்று பாதிப்புபுதுக்கோட்டை மாவட்டத்தில் 7 பேருக்கு கருப்பு பூஞ்சை நோய் தொற்று ஏற்பட்டுள்ளது. அவர்கள் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தமிழகத்தில் கொரோனா 2-வது அலையின் தாக்கம் பரவலாக உள்ளது. இந்நிலையில் கருப்பு பூஞ்சை நோய் தாக்கமும் அதிகரித்தபடி உள்ளது. பல்வேறு இடங்களில் தொற்றுக்கு ஆளானவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்திலும் இந்நோய் தொற்று அறிகுறி ஏற்பட்டவர்கள் உடனடியாக மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொள்ளும்படி மாவட்ட நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.

அறந்தாங்கி பகுதியில் ஏற்கனவே 2 பேருக்கு கருப்பு பூஞ்சை தொற்று இருந்ததால் சிகிச்சைக்காக வெளிமாவட்டங்களில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இந்த நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் கருப்பு பூஞ்சை தொற்றுக்கு இதுவரை 7 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து அவர்கள் சிகிச்சை பெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments