தமிழகத்தில் இன்றும், (மே 8) நாளையும் (மே 9) 24 மணிநேர பேருந்து சேவை… தமிழக அரசு அறிவிப்பு

தமிழகத்தில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து, இன்று நாளையும், சொந்தவூர் செல்வோர் வசதிக்காக அதிக எண்ணிக்கையில் பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளன.

தமிழகத்தில் வருகிற திங்கள் கிழமை முதல் இரு வாரங்களுக்கு முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தனியார் நிறுவனங்களில் ஊழியர்கள் பணியாற்றவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. அரசு நிறுவனங்களிலும் 50% ஊழியர்களுடன் இயங்க அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதனால் ஊரடங்கு காலத்தில் பலரும் சொந்த ஊர் செல்ல முன்னேற்பாடுகளை செய்து வருகின்றனர்.

இந்த நிலையில், கொரோனா பரவலை கட்டுப்படுத்தவும், வெளியூர் பேருந்துகளில் தள்ளுமுள்ளு ஏற்படுவதை தவிர்க்கவும் கூடுதல் பேருந்துகள் இன்றும், நாளையும் இயக்கப்படவுள்ளன. இந்த பேருந்துகள் 24 மணி நேரமும் இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே பயணிகள் பதற்றமின்றி, கொரோனா கட்டுப்பாடு விதிகளை பின்பற்றி இன்று மற்றும் நாளை வெளியூர் பேருந்துகளில் பயணித்து சொந்த ஊர் செல்லலாம் என தெளிவுப்படுத்தப்பட்டுள்ளது.

* இன்று, நாளை வழக்கம்போல் பேருந்துகள் இயக்கப்படும்.

* திங்கட்கிழமை முதல் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் பேருந்து சேவைக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

* பயணிகள் தேவைக்கேற்ப சிறப்பு பேருந்துகளும் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

* ஒவ்வொரு பேருந்து நிலையத்திலும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்துத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments