கோபாலப்பட்டிணத்தில் கொரோனா ஊரடங்கால் நோன்பு பெருநாள் தோப்பு, ஆலமரம் களையிழந்தது.!



கொரோனா ஊரடங்கால் நோன்பு பெருநாள் களையிழந்தது. வீடுகளில் தொழுகை நடைபெற்றது.

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க மே 10 தேதி முதல் மே 24 தேதி வரை ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

ஊரடங்கில் மத வழிபாட்டு தலங்கள் திறக்க அனுமதிக்கப்படவில்லை. இந்த நிலையில் நேற்று 14.05.2021 நோன்பு பெருநாள் கொண்டாடப்பட்டது. வழக்கமாக ரம்ஜான் பண்டிகையின் போது பள்ளிவாசல்கள் மற்றும் பொதுவான ஒரு இடங்களில் கூட்டுத்தொழுகை நடைபெறுவது வழக்கம். இந்த நிலையில் கொரோனா வைரசின் பரவல் காரணமாக பொது இடங்கள் மற்றும் பள்ளிவாசல்களில் கூட்டமாக தொழுகை நடத்த வேண்டாம் என அரசு தரப்பில் அறிவுறுத்தப்பட்டிருந்தன.

புதுக்கோட்டை மாவட்டம் கோபாலப்பட்டிணத்தில் ரம்ஜான் பண்டிகையையொட்டி வழக்கமாக சிறப்பு தொழுகை நடைபெறும் ஆலமரம் பகுதி ஈத்கா மைதானம் பூட்டப்பட்டிருந்தன.

ஊரடங்கின் காரணமாக ரம்ஜான் பண்டிகை களையிழந்தது. ஊர் மக்கள் புதிய புத்தாடை அனிந்து எளிமையாக கொண்டாடினர்.  குடும்ப உறுப்பினர்கள் சமூக இடைவெளியை பின்பற்றி இறைவனை வேண்டி தொழுகையில் ஈடுபட்டனர். ஒருவருக்கொருவர் பண்டிகை வாழ்த்துகளை பரிமாறிக்கொண்டனர். மேலும் செல்போன் மூலமாகவும் உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்தனர். வீடுகளில் பிரியாணி சமைத்து உண்டனர். மேலும் தங்களது நண்பர்கள், உறவினர்களுக்கு கொடுத்து மகிழ்ந்தனர்.

பெருநாள் அன்று கோபாலப்பட்டிணத்தில் ஆண்களுக்கு காலையிலும் (ஆலமரம்), பெண்களுக்கு மாலையிலும் (தோப்பு) காலம் காலமாக நடைபெறும். இந்நிலையில் கொரோனா ஊரடங்கு காரணமாக ஆலமரம் மற்றும் தோப்பு நடைபெறவில்லை. இதே போன்று கடந்த ஆண்டும் கொரோனா ஊரடங்கால் நோன்பு பெருநாள் களையிழந்தது குறிப்பிடதக்கது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments