கோபாலப்பட்டிணத்தில் ஈகை திருநாள் கொண்டாட்டம்! (புகைப்படங்கள்)ஈகைத்திருநாள் (நோன்பு பெருநாள்) உலகெங்கிலும் வாழும் இஸ்லாமிய மக்கள் நேற்று முன்தினம் மற்றும் நேற்று கொண்டாடினர்.

கொரோனா நோய் பரவல் இரண்டாம் அலை அதிகரித்துவருவதன் காரணமாகவும் மே 24 வரை ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில் வெகு விமர்சையாக கூட்டுதொழுகை நடத்தவேண்டிய நோன்பு பெருநாள் தொழுகை வீடுகளில் தனி மனித இடைவெளி கடைபிடித்து குடும்பத்தார் ஒன்று கூடி அவர் அவர் பகுதிகளில் தொழுகையை நிறைவேற்றிக்கொண்டனர். 

கோபாலப்பட்டிணத்தில் சமூக இடைவெளி கடைபிடிக்கபட்டு உறவினர்கள், நண்பர்களுடன் அவரவர் இல்லங்களில் சிறப்பான முறையில் கடமையானா நோன்பு பெருநாள் தொழுகையை நிறைவேற்றி தங்களின் மகிழ்ச்சியை மற்றவர்களுடன் பகிர்ந்து கொண்டு இளைஞர்கள் தங்களது புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவு செய்து தங்களது வாழ்த்துக்களை பகிர்ந்தனர்.

அதே போன்று நேற்று முன்தினம் (13/05/2021) சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், குவைத், கத்தர், பஹ்ரைன், ஓமன் மற்றும் மலேசியா, சிங்கப்பூர் கொண்டாடினர்.

அதே போன்று நேற்று (14/05/2021) புருனையில் வாழும் நமது ஊர் மக்கள் மிகவும் குதூகலத்துடன் சமூக இடைவெளியுடன் ஈகைத்திருநாளை கொண்டாடினர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்Post a Comment

0 Comments