புதுக்கோட்டை மாவட்டத்தில் தேவையில்லாமல் வெளியில் வருபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை: போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் எச்சரிக்கை!!புதுக்கோட்டை மாவட்டத்தில் முழு ஊரடங்கை அமல்படுத்துவதில் தீவிரம் காட்டப்படும். தேவையில்லாமல் வெளியில் வருபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் தொண்டு நிறுவனங்கள் மற்றும் தன்னார்வலர்களை ஈடுபடுத்தும் பணியை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் நேற்று உழவர் சந்தையில் தொடங்கி வைத்தார். 

அதன்பின் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- கொரோனா ஊரடங்கில் மக்கள் தேவையில்லாமல் வெளியில் வரக்கூடிய சூழல் உள்ளது. அதனால் முழு ஊரடங்கு அமல்படுத்துவது தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. தேவையில்லாமல் வெளியில் வருபவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்படும். சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேலும் அபராதம் விதிக்கப்படும். தற்போது உள்ள சூழ்நிலையில் மக்களின் பங்களிப்பு தேவை. தேவையில்லாமல் மக்கள் வெளியில் வராமல் இருந்தால் தொற்று குறைய வாய்ப்பு உள்ளது. நோய் பரவலை தடுக்க அனைவரது ஒத்துழைப்பும் தேவை.

ஊரடங்கில் விதிமீறல் தொடர்பாக அபராதம் விதிக்கப்பட்டதில் ரூ.20 லட்சம் வரை வசூலிக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் சுழற்சி முறையில் 850 போலீசார் பணியாற்றி வருகின்றனர். தேவைப்படும் போது கூடுதல் போலீசார் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள். இவ்வாறு அவர் கூறினார். நிகழ்ச்சியில் டவுன் துணை போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார், டவுன் இன்ஸ்பெக்டர் குருநாதன் மற்றும் போலீசார், அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments