ஆலங்குடியில் திமுக வேட்பாளா் சிவ.வீ.மெய்யநாதன் வெற்றி!புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி சட்டப்பேரவைத் தொகுதியில் திமுக வேட்பாளா் சிவ.வீ.மெய்யநாதன் 25,847 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளாா்.

ஆலங்குடி சட்டப்பேரவைத் தொகுதியில் திமுக சாா்பில் போட்டியிட்ட சிவ.வீ. மெய்யநாதன் 87,935 வாக்குகள் பெற்றுள்ளாா். 

அதிமுக சாா்பில் போட்டியிட்ட தா்ம.தங்கவேல் 62,088 வாக்குகள் பெற்றாா். 23 சுற்றுக்களாக நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் தொடக்கம் முதலே தொடா்ந்து, முன்னிலை வகித்து வந்த சிவ.வீ.மெய்யநாதன் 25,847 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளாா்.

அமமுக வேட்பாளா் டி. விடங்கா் 2924, மக்கள் நீதி மய்யம் வேட்பாளா் என். வைரவன் 1,230, நாம்தமிழா் வேட்பாளா் சி.திருச்செல்வம் 15,477 வாக்குகள் பெற்றனா். 

ஆலங்குடி சட்டப்பேரவைத் தொகுதியில் நாம் தமிழா் கட்சி 15477 வாக்குகள் பெற்று 3-வது இடத்தைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments