கொரோனா பரவலை தடுப்பதற்காக கட்டுமாவடி மீன் மார்க்கெட் மூடல்!கொரோனா பரவலை தடுப்பதற்காக கட்டுமாவடி மீன்மார்க்கெட் நேற்று மூடப்பட்டது.

தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்தநிலையில் மீன்மார்க்கெட், இறைச்சிகடைகளில் பொதுமக்களின் கூட்டம் அதிக அளவில் இருந்தது. இது கொரோனா பரவலை அதிகரிக்கும் வகையில் இருந்தது.

எனவே சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் இறைச்சி, மீன்கள் விற்க அரசு தடைவிதித்தது. அதன்படி புதுக்கோட்டை மாவட்டத்திலேயே மிக பெரிய மீன் மார்க்கெட்டான கட்டுமாவடி மற்றும் மணமேல்குடி மீன் மார்க்கெட்டுக்கள் நேற்று முன்தினம் மூடப்பட்டன.

அதுமட்டுமின்றி நாட்டுப்படகு மீனவர்களும் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை. வியாபாரிகளும் வரவில்லை. இதனால் மீன்மார்க்கெட்டுகள் வெறிச்சோடி காணப்பட்டது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments