கோபாலப்பட்டிணம் மக்களே! கொரோனா காலம் & வெயில் காலம்: வீட்டிலேயே இருங்கள்! விழிப்புணர்வுடன் இருங்கள்!!கொரோனா 2ம் அலை பரவல் காரணமாக தமிழகத்தில் முழு ஊரடங்கு அமலில் உள்ளது.

தமிழகத்தில் பெரும்பாலான மருத்துவமனையில் படுக்கை அறைகள் தீர்ந்துவிட்டது. கொரோனா நோயாளிகள் அதிகரிப்பதால் மருத்துவமனையில் சிகிச்சை பெற இடமில்லாதது வருத்தமளிக்கிறது. இந்தியாவில் ஒரு போரை நடைபெற்று வருகிறது.

கொரனோ காலம் வெயில் & காலம்:

கோபாலப்பட்டிணத்தில் கடந்த சில நாட்களாக ஒருபக்கம் கொரானோவின் கோரப்பிடி மறுபக்கம் அதனால் ஊரடங்கு, இன்னொரு பக்கம் வறுத்தெடுக்கும் கத்திரி அக்னி வெயில் அனலாக உள்ளது.

தற்போது கொரானா, வெயில் இருந்து தப்பிக்க ஓரே வழி வீட்டில் இருப்பது தான்.

முக்கியமாக குழந்தைகள் வீட்டை வீட்டு வெளியில் அனுப்பாதீர்கள், கண்கானித்தே கொண்டு இருங்கள்.

ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடுங்கள், குடும்பத்துடன் நேரத்தை ஓதுக்குங்கள், நன்றாக ஓய்வு எடுங்கள்.

தயவுசெய்து அத்தியாவசிய தேவைகளுக்காக வெளியே செல்லும் போதும், வெளியூர் செல்லும் போதும் உங்கள் வீட்டு குழந்தைகள் நலனுக்காகவும், உங்கள் குடும்ப நலனுக்காகவும், உங்கள் ஊர் நலனுக்காகவும், உங்கள் ஊரில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்கவும் கண்டிப்பாக மாஸ்க் அணிந்து செல்லுங்கள் மற்றும் சமூக இடைவெளியை கடைபிடியுங்கள். வீட்டிற்குள் நுழையும் முன் கைகளை நன்றாகக் கழுவிக் கொள்ளுங்கள். 

மருத்துவ தேவைகளுக்காக வெளியூர் செல்லும்  பொது மக்கள் தயவு செய்து முக கவசம் அணியவும் மற்றும் சமூக இடைவெளியை தவறாமல் கடைபிடிக்க வேண்டுகிறோம். 

மத்திய, மாநில அரசுகள் வழியுறுத்திருக்கும் வழிமுறைகளை பின்பற்றினால் நமது குடும்பத்தையும், உறவினர்களையும் நமது ஊரையும்  கொரோனாவில் இருந்து பாதுகாத்துக் கொள்ளலாம். 

முகக்கவசம் இனி உயிர் கவசம்

தொகுப்பு..

GPM மீடியா குழு,
கோபாலப்பட்டிணம்
மீமிசல்
ஆவுடையார் கோவில் தாலுகா
புதுக்கோட்டை மாவட்டம்

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments