முழு ஊரடங்கு அமலுக்கு வந்தது மீமிசலில் கடைகள் அடைப்பு வெறிச்சோடிய மீமிசல் கிழக்கு கடற்கரை சாலை






தமிழகத்தில் கொரோனா பரவல் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு அதிகரித்துள்ளது.கொரோனா பரவலை கட்டுப்படுத்த 2 வாரங்களுக்கு முழு ஊரடங்கு கடை பிடிக்கப்படும் என்று தமிழக அரசு சார்பில் நேற்று முன்தினம் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதனைத்தொடர்ந்து கடந்த 2 நாட்களும் (சனி, ஞாயிறு) அனைத்து கடைகளையும் திறந்துவைக்க அனுமதி அளிக்கப்பட்டு இருந்தது.

இந்தநிலையில் இன்று முதல் முழு ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது. வருகிற 24-ந்தேதி வரை 2 வாரங்களுக்கு இந்த ஊரடங்கு கடை பிடிக்கப்படும். .

கரோனா பரவலைக் கட்டுப்படுத்த தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு அமலுக்கு வந்ததைத் தொடர்ந்து புதுக்கோட்டை மாவட்டம் மீமிசலில் மதியத்துக்கு மேல் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன.

தமிழகத்தில் கரோனா பரவல் இரண்டாவது அலையின் தாக்கம் தீவிரம் அடைந்துள்ளது.நேற்று, தினசரி பாதிப்பு 28,897 என்றளவில் இருந்தது.

அன்றாட கரோனா பரவல் அதிகரித்துவரும் நிலையில் தமிழக அரசால் அறிவிக்கப்பட்ட முழு ஊரடங்கு இன்று மே 10 முதல் அமலுக்கு வந்தது.

காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரை காய்கறி, பலசரக்கு, மளிகைக் கடைகள், டீக்கடைகள், இறைச்சி, மீன் கடைகள் வழக்கம்போல் செயல்பட்டன.

உணவகங்களில் பார்சல் மட்டும் வழங்க அனுமதிக்கப்பட்டது. மருந்துக் கடைகள்,பால் கடைகள் வழக்கம்போல் செயல்பட்டன. மற்ற கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டன.

மதியம் வரை சாலைகளில் மக்கள் நடமாட்டம் குறைவான அளவில் இருந்தது. 
பொதுப் போக்குவரத்துக்கு அரசு, தனியார் பேருந்துகள், வாடகைக் கார்கள் இயங்காததால் சாலைகளில் வாகனப் போக்குவரத்து குறைவாகவே காணப்பட்டது.ECR சாலையில் வாகனப் போக்குவரத்தின்றி சாலைகள் வெறிச்சோடிக் காணப்பட்டன.

மதியத்துக்கு மேல் சாலைகள், கடைவீதிகள் வெறிச்சோடி காணப்பட்டன. 

ஊரடங்கு உத்தரவை மதித்து பொதுமக்கள் தங்களது வீடுகளிலேயே தங்கி இருந்தனர்.



















எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments