புதுக்கோட்டை மாவட்டத்தில் டி.ஏ.பி.உரத்தை கூடுதல் விலைக்கு விற்றால் நடவடிக்கை! வேளாண் அதிகாரி எச்சரிக்கை!!



டி.ஏ.பி. உரத்தை கூடுதல் விலைக்கு விற்றால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் சிவகுமார் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
புதுக்கோட்டை மாவட்டத்தில் தற்போது பரவலாக மழை பெய்துவருவதைத் தொடர்ந்து விவசாயிகள் குறுவை சாகுடியினை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். குறுவை சாகுடிக்கு தேவையான உரங்கள் அனைத்தும் தனியார் உர விற்பனை நிலையங்கள் மற்றும் கூட்டுறவுக் கடன் சங்கங்களில் இருப்பு வைக்கப்பட்டு வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

மத்திய அரசு டி.ஏ.பி. உரத்தின் விற்பனை விலையினை அதிகபட்ச விலையாக மூட்டைக்கு ரூ.1,200-க்கு நிர்ணயம் செய்துள்ளது. எனவே, புதுக்கோட்டை மாவட்ட சில்லரை உர விற்பனையாளர்கள் டி.ஏ.பி. உரத்தினை நிர்ணயித்த விலையை விட கூடுதலாக விற்பனை செய்யக்கூடாது. மேலும் உர விற்பனை நிலையங்களில் விற்பனை முனையக் கருவி மூலம் வினியோகம் செய்யப்படுவதனால் விவசாயிகள் உர விற்பனை நிலையத்திற்குச் செல்லும்போது ஆதார் அட்டையினைக் கொண்டுசென்று உரம் வாங்கிக்கொள்ளலாம்.
 
உரம் வாங்கும்போது கட்டாயமாக ரசீது கேட்டுப் பெற்றுக்கொள்ளவும். உரம் சம்பந்தப்பட்ட விவரங்களுக்கு தரக்கட்டுப்பாடு வேளாண்மை உதவி இயக்குனரை தொடர்புகொள்ளவும்.

புதுக்கோட்டை மாவட்ட சில்லரை உர விற்பனையாளர்கள் டி.ஏ.பி. உரத்தினை மத்திய அரசு நிர்ணயித்த அதிகபட்ச விலையை விட கூடுதலாக விற்கப்படுவதாக புகார் பெறப்பட்டால் உரக்கட்டுபாடு ஆணை 1985- ன் படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments