ஆர்.புதுபட்டினத்தில் அல்-அமீன் இஸ்லாமிய இளைஞர் நற்பணி மன்றம் சார்பில் கபசுர குடிநீர் வழங்கல்ஆர்.புதுபட்டினம் அல்-அமீன் இஸ்லாமிய இளைஞர் நற்பணி மன்றம் சார்பில் கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.

தற்போது கொரோனா 2-வது அலை பரவி வருவதால் கிராம மக்கள் அனைவருக்கும் நோய் எதிர்ப்பு சக்தியை பெறுவதற்காக புதுக்கோட்டை மாவட்டம் மீமிசல் அருகே ஆர்.புதுபட்டினத்தில் அல்-அமீன் இஸ்லாமிய இளைஞர் நற்பணி மன்றம் சார்பில் கொரோனா நோய் தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் ஆர்.புதுபட்டினம் ஜூம்மா பள்ளிவாசலில் இன்று (28/05/2021) வெள்ளிகிழமை கபசுர குடிநீர் வழங்கப்பட்டது. 

இந்நிகழ்வில் அல் அமீன் இஸ்லாமிய இளைஞர் நற்பணி மன்ற தலைவர் கலந்தர் பாட்ஷா, மன்ற உறுப்பினர்கள் நெய்னா முஹம்மது, ரஹமான் அலி, சபியுல்லா கான் ஆகியோர் கலந்து கொண்டு கபசுரக் குடிநீர் வழங்கினர். சிறப்பு அழைப்பாராக அல்-அமீன் மன்ற ஆலோசனைக் குழு உறுப்பினர் நவாஸ்கான் கலந்து கொண்டார். இதில் சுமார் 400 பேர் பயனடைந்தனர்.எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments