மே மாதத்துக்கான மின் கட்டணத்தை பொதுமக்களே சுயமாக கணக்கீடு செய்து கொள்ளலாம் - மின்சார வாரியம் அறிவிப்பு




 
மின் கட்டணத்தை பொதுமக்களே சுயமாக மதிப்பிட்டு, அதை வாட்ஸ் அப் வழியாக மின்வாரிய அதிகாரிகளுக்கு அனுப்ப வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா தொற்றின் 2வது அலையை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக கடந்த 10 ஆம் தேதி முதல் வரும் 24 ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த சூழலில் நடப்பு மாதத்திற்கான மின் கட்டணத்தை பொது மக்களே கணக்கீடு செய்து கொள்ளும் முறையை மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

இது குறித்து தமிழக மின்சார வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், நடப்பு மே மாதத்துக்கான மின் கட்டணத்தை பொதுமக்களே தங்கள் வீடுகளில் இருக்கும் மீட்டர் பாக்ஸ் மூலமாக சுயமாக கணக்கீடு செய்து கொள்ளலாம் என்றும் அதை போட்டோ எடுத்து தங்கள் சுய மதிப்பீட்டை வாட்ஸ் அப் வழியாக மின் வாரிய அதிகாரிகளுக்கு அனுப்ப வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மே மாதத்துக்கான மின் கட்டணம் ஏற்கனவே கணக்கிடப்பட்டிருந்தால் மின்சார வாரிய உதவி பொறியாளரும், உதவி கருவூல அலுவலரும் அதை நீக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பொதுமக்கள் தரும் சுய மதிப்பீட்டு கட்டணங்களில் சந்தேகம் இருந்தால் மீண்டும் மின் வாரிய பணியாளர்களே ரீடிங் எடுப்பார்கள் என்றும் மதிப்பீடு உறுதி செய்யப்பட்டால் இணைய வழியில் மின்கட்டணத்தை செலுத்திக் கொள்ளலாம் என்றும் மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments