மீமிசலில் ஊரடங்கை மீறி சுற்றியவர்களுக்கு கொரோனா பரிசோதனை!கொரோனா வைரஸ் பரவல் காரணமாக தற்போது தமிழகத்தில் ஊரடங்கு அமலில் உள்ளது.

இதனால் பொதுமக்கள் யாரும் வெளியில் தேவையில்லாமல் சுற்ற வேண்டாம் என்று அரசு அறிவித்து இருந்தது. ஆனால் புதுக்கோட்டை மாவட்டம் கடலோர பகுதிகளில் ஊரடங்கு மீறி பலர் சுற்றித்திரிகின்றனர். 

இதனால் மீமிசல் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார், சப்-இன்ஸ்பெக்டர் துரைசிங்கம், வருவாய் ஆய்வாளர் முத்துக்குமார், மீமிசல் அரசு மருத்துவர் கவுதம் ஆகியோர் ஊரடங்கை மீறி வெளியில் சுற்றியவர்களை பிடித்து கொரோனா பரிசோதனை செய்தனர். மேலும் தேவையில்லாமல் வெளியில் சுற்றியவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments