முழு ஊரடங்கில் ரேஷன் கடைகள் நாளை முதல் இயங்க அனுமதி - தமிழக அரசு




 தமிழகத்தில் இன்று முதல் ஒரு வாரத்திற்கு தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது.

தமிழகத்தில் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், ரேஷன் கடைகள் செயல்பட தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் தொடர்ந்து அதிகரித்து வருவதை கட்டுப்படுத்தும் விதமாக கடந்த 10ம் தேதி முதல் இன்று 24ம் தேதி வரை சில தளர்வுகளுடன் ஊரடங்கு அமலில் உள்ளது. இந்நிலையில் தினசரி கொரோனா பாதிப்பு 36000 என்ற அளவில் பதிவானது. இதனால் ஊரடங்கு கட்டுப்பாடுகளை மேலும் அதிகரிப்பது தொடர்பாக மருத்துவ நிபுணர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் குழுவை கூட்டி முதலமைச்சர் ஆலோசனை நடத்தினர்.

அப்போது சில கட்டுப்பாடுகளை அமல்படுத்த அரசுக்கு இரு குழுவினரும் அறிவுறுத்தினர். இதனையடுத்து ஒருவார காலம் தளர்வுகளற்ற முழு ஊரடங்கை நீட்டித்து அரசு அறிவித்துள்ளது. அதன்படி, தமிழகத்தில் இன்று முதல் ஒரு வாரத்திற்கு தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது.

இதில், மருந்தகங்கள். உணவகங்களில் குறிப்பிட்ட நேரம் மட்டும், பார்சல் சேவைக்கு அனுமதி, ஸ்விக்கி, சோமேட்டோ போன்ற டெலவிரி சேவைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அரசு அலுவலங்கள், அத்தியாவசிய துறைகள் மட்டும் இயங்கும், வங்கிகள் செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது. இவை தவிர்த்து மற்ற எதற்கும் அனுமதி வழங்கப்படவில்லை.

இந்நிலையில், நாளை முதல் ரேஷன் கடைகள் செயல்பட தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், ரேஷன் கடைகள் நாளை முதல் 31ம் தேதி வரை காலை 8 மணி முதல் நண்பகல் 12 மணி வரை செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல், வங்கிகள், காப்பீடு நிறுவனங்கள் மூன்றில் ஒரு பங்கு ஊழியர்களுடன் இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments