கோட்டைப்பட்டிணத்தில் ஊராட்சி மன்றம், SDPI கட்சி மற்றும் தன்னார்வ இளைஞர்கள் இணைந்து வீடு,வீடாக சென்று கபசூர குடிநீர் வினியோகம்!



கோட்டைப்பட்டிணத்தில் ஊராட்சி மன்றம், SDPI கட்சி மற்றும் தன்னார்வ இளைஞர்கள் இணைந்து வீடு,வீடாக சென்று கபசூர குடிநீர் வினியோகம் செய்தனர்.

புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டிணம் ஊராட்சி மன்றம், SDPI கட்சி மற்றும் தன்னார்வ இளைஞர்கள் இணைந்து இன்று முதல் தொடர்ந்து மூன்று நாளைக்கு கபசூர குடிநீர் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு அதனடிப்படையில் இன்று 24.05.2021 கோட்டைப்பட்டினம் தெற்கு தெரு, மேலத் தெரு, ரஹ்மத் நகர் மற்றும் இக்பால் தெரு உள்ளிட்ட பகுதிகளுக்கு வீடுகளுக்கு சென்று விநியோகிக்கப்பட்டது. இதில் சுமார் ஆயிரத்திற்கும் அதிகமான பொதுமக்கள் பயன் அடைந்தனர். 

இந்நிகழ்வில் ஊராட்சி மன்ற தலைவர் ஆனா.அக்பர் அலி ஒன்றிய குழு உறுப்பினர் சேர்க்கான், SDPI கட்சி நிர்வாகிகள் முகமது சாலிகு செல்லத்தா மற்றும் முகமது மைதீன் கலந்து கொண்டனர்.



இப்படிக்கு:
SDPI கட்சி மற்றும் தன்னார்வ இளைஞர்கள்
கோட்டைப்பட்டிணம்.

தகவல்: செய்யது இப்ராஹீம், கோட்டைப்பட்டினம்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments