தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகிகள் மாவட்ட ஆட்சியருடன் சந்திப்பு!

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகிகள் மாவட்ட ஆட்சியருடன் சந்திப்பு!


நாடு முழுவதும் கொரோனா பரவலின் தாக்கத்தால் ஏராளமான மக்கள் பெரும் பாதிப்பும் உயிர் இழப்பு ஏற்பட்டு வரும் சூழ்நிலையில், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் புதுக்கோட்டை மாவட்டத்தின் சார்பாக, கொரோனாவினால் உயிரிழந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்தல் மற்றும் ஆக்ஸிஜன் சிலிண்டர் சேவை,ஆம்புலன்ஸ் ஏற்பாடு,  கபசுர குடிநீர், சாலையோர மக்களுக்கு உணவு வழங்குதல், அவசரகால இரத்ததானம் இன்னபிற சமூக பணிகளும் நடைபெற்று வருகிறது.

கடந்த 19/5/21 அன்று முதலமைச்சர் தலைமையில் நடந்த தொண்டு நிறுவனங்களின் ஆலோசனை கூட்டத்தில் TNTJ அரசுடன் இணைந்து பணிகளை செய்யுமாறு கூறியிருந்தார். அதன் அடிப்படையில் புதுக்கோட்டை  மாவட்ட ஆட்சியர்  அவர்களை 
நேற்று (25-05-2021) நேரில் சந்தித்து, தமிழக அரசின் கொரோனா பேரிடர் கால பணிகளில் ஈடுபட தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் புதுக்கோட்டை மாவட்டம்  தயாராக உள்ளது  என்பதை    தெரியப்படுத்தி கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. மேலும் மாவட்டத்திலுள்ள எங்கள் நிர்வாகத்தின் கீழ் இயங்கும் பள்ளிவாசல்களை கொரோணா தனிமை படுத்தும் வார்டாக பயன்படுத்தித் கொள்ளுமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments