மலேசியாவில் இரு வாரங்களுக்கு முழு ஊரடங்கு அறிவிப்பு





 
மலேசியாவில் ஜூன் 14 ஆம் தேதிவரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது.

மலேசியாவில் வரும் ஜூன் 14 ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. மலேசியாவில் கொரோனா வைரஸ் பரவல் மீண்டும் அதிகரிக்கத்தொடங்கியுள்ளது. மலேசியாவில் வெள்ளிக்கிழமை 8 ஆயிரம் பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. 

இதையடுத்து, கடுமையான கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு வரும் 1-14-ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக அந்நாட்டின் பிரதமர்  முகாயிதின் யாசின் தெரிவித்துள்ளார். முழு ஊரடங்கு நாள்களில் அனைத்து தொழில் நடவடிக்கைகளும் நிறுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

முன்னதாக, ஜூன் 7 ஆம் தேதி வரை பகுதியளவு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு இருந்தது. ஆனால் தொற்று பாதிப்பு அதிகரிப்பையடுத்து முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. மலேசியாவில் இதுவரை 5,49,514- பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments