பெருமருதூர் கிராமத்தில் தடுப்பூசியை ஆர்வத்துடன் போட்டுக் கொண்ட நேதாஜி இளைஞர் நற்பணி மன்ற இளைஞர்கள்






தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பின் இரண்டாவது அலை மிகவும் தீவிரம் காட்டி வருகிறது. 

கடந்த ஆண்டு முதல் அலையை காட்டிலும் தற்போது உயிரிழப்புகள் அதிக அளவில் ஏற்பட்டு வருகின்றன. இதற்கு கொரோனா உருமாறி மிகவும் சக்தி வாய்ந்த வைரஸாக மாறியிருப்பதே காரணம் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். இதனால் இளைஞர்கள் அதிக அளவில் பாதிப்பிற்கு ஆளாவது மட்டுமின்றி உயிரிழப்புகளையும் சந்திக்கின்றனர்.

எனவே கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மட்டுமின்றி தடுப்பூசி போட்டுக் கொள்வதிலும் ஆர்வம் அதிகரித்துள்ளது. 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இருப்பினும் போதிய அளவில் இருப்பு இல்லாத காரணத்தால் இந்த திட்டம் இன்னும் முழுமையான செயல்பாட்டிற்கு வரவில்லை.

அதேசமயம் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் தடுப்பூசி செலுத்தி கொள்ள இளைஞர்கள் முன்வந்த வண்ணம் உள்ளனர். தற்போதைய சூழலில் தடுப்பூசி ஒன்றே தீர்வாக இருக்கிறது. 

இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் அருகே பெருமருதூர் கிராமத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நேதாஜி இளைஞர் நற்பணி மன்ற இளைஞர்கள் மே.26 இன்று புதன்கிழமை  24 பேர் கொரனோ தடுப்பூசி போட்டுக் கொண்டனர்.... மேலும் மக்களிடையே கொரோனா தடுப்பூசி பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தினர்...




எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments