அறந்தாங்கியில் இஸ்லாமிய மன்றமும் நகராட்சி நிர்வாகமும் இனைந்து நடத்திய தடுப்பூசி முகாம் - அமைச்சர் பங்கேற்பு
அறந்தாங்கி இஸ்லாமிய மன்றமும் நமது நகராட்சி நிர்வாகமும் இனைந்து  7/6/2021 நேற்று அறந்தாங்கியில் சத்திய மூர்த்தி நடுநிலைப்பள்ளியில்  தடுப்பூசி முகாம் நடைபெற்றது .
 
மாண்புமிகு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி அவர்களின் தலைமையில் இரண்டு ஆக்சிசன் செரிவூட்டி கருவிகள் அறந்தாங்கி சுகாதாரத்துறைக்கு டாக்டர்.முகமது இத்ரீஸ் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
 மேலும்  சுகாதாரத்துறை முன்களபணியாளர்கள் நகராட்சி தூய்மை பணியாளர்கள் மற்றும் நகராட்சி நிர்வாக பணியாளர்கள் சுமார் 300 சிக்கன் பிரியாணி பொட்டலங்கள் தண்ணீர் பாட்டில் கொடுக்கப்பட்டது. மேலும் முககவசம் சானிடைசர் பயனாளிகளுக்கு கொடுக்கப்பட்டது. 

இந்த விழாவில் மாண்புமிகு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி அவர்கள் நகராட்சி ஆணையர் நகராட்சி சுகாதார ஆய்வாளர் மற்றும் அலுவலர்கள் சுகாதார துறை மருத்துவர்கள் செவிலியர்கள். வர்த்தக சங்க தலைவர் மற்றும் நிர்வாகிகள் ரோட்டரி கிளப் நிர்வாகிகள் திமுக நகர ஒன்றிய பொறுப்பாளர்கள் நகர  காங்கிரஸ் பொறுப்பாளர்கள். மனிதநேய மக்கள் கட்சி பொறுப்பாளர்கள்.ஜமாத் பொறுப்பாளர்கள் நமது சங்க தலைவர் செயலர் பொருளாளர் ஒருங்கிணைப்பாளர்கள். சங்க உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் AIM மன்றத்தின் சார்பில் மிக்க நன்றியினை தெரிவித்துக்கொள்கிறோம். தடுப்பூசி முகாமில்  கோவாக்சின் தடுப்பூசி போடப்பட்டது. 

என்றும் மக்கள் பணியில்

அறந்தாங்கி இஸ்லாமிய மன்றம்
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments