புதுக்கோட்டை நகர் பகுதிகளில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, ஜனநாயக மாதர் சங்கம், மருந்தாளுநர்கள் சங்கம் சமுக ஆர்வலர்கள் இணைந்து நடத்திய கப சுர குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, ஜனநாயக மாதர் சங்கம், மருந்தாளுநர்கள் சங்கம் சமுக ஆர்வலர்கள் இணைந்து அசோக் நகர்,பொன்னகர், பகுதிகளில் கப சுர குடிநீர்  வழங்கும் நிகழ்ச்சி:

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் கவிவர்மன் வழிகாட்டுதல்படி, புதுக்கோட்டை
அசோக் நகர், பொன்னகர் பகுதிகளில் கொரோனா இரண்டாம் அலையிலிருந்து மக்கள் தங்களை பாதுகாத்துக்கொள்ள கப சுர கசாயம், முகக்கவசம்
மற்றும், ஆவிபிடித்தல் கேப்சூல்கள்,வைட்டமின் மாத்திரைகள்,பொது மக்களுக்கு தடுப்பூசி விழிப்புணர்வு, வழங்கும் நிகழ்ச்சியை புதுக்கோட்டை நகராட்சி ஆணையர் ஜீவ.சுப்பிரமணியன்.அவர்கள் துவங்கிவைத்தார்,

இதில் ஜனநாயக மாதர் சங்க மாவட்ட செயலாளர் சலோமி,பொருளாளர் பாண்டிசெல்வி, மருந்தாளுநர்கள் சங்க மாநிலத் தலைவர் கார்த்திக்,அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் சங்க மாநில தலைவர் தேவமணி, அன்னலில்லி,ஹெலன், அந்தோனியம்மாள்,ஜீவதனம், சமுக ஆர்வலர்கள்  புன்னகை அறக்கட்டளை தலைவர் ஆ.சே.கலைபிரபு, தனபால்,ஜெகன், செல்வராஜ்,ஆர்சிஎம்.தினேஷ், ஆகியோர் பாதுகாப்பான முறையில் கலந்து கொண்டனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments