முதல்வரின் தனிப்பிரிவில் புகார் அளிக்க வேண்டுமா? இதை செய்யுங்க!
தமிழக முதல்வரிடம் பொதுமக்கள் புகார் அளிக்க வசதியாக முதல்வரின் தனிப்பிரிவு இணையதளம் புதிதாக தொடங்கப்பட்டுள்ளது.

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக அபார வெற்றி பெற்றது. இதையடுத்து அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் கடந்த மே 7-ஆம் தேதி முதல்வராக பதவியேற்றார் . ஸ்டாலின் முதல்வராக பதவியேற்று ஒரு மாதம் ஆன நிலையில் பல்வேறு திட்டங்களுக்கு வழி வகுத்து வருகிறார். கொரோனா நிவாரண தொகை ரூ.4000, 14 இலவச அரிசி மளிகை பொருட்கள், செவிலியர்களுக்கு பணி நிரந்தரம், தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு விபத்தில் இழந்த குடும்பங்களுக்கு பணி அரசு வேலை மற்று உதவித்தொகை, முன்கள பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை, பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் என பல்வேறு அறிவிப்புகளை அடுத்தடுத்து வெளியீட்டு அதிரடி காட்டி வருகிறார். அதேபோல் உங்கள் தொகுதியில் முதலமைச்சர் என்ற திட்டத்தின் கீழ் மக்கள் அளித்த புகார்களின் அடிப்படையில் தீர்வுகள் எடுக்கப்பட்டு வருகிறது. 
முதல்வரின் தனிப்பிரிவில் புகார் அளிக்க வேண்டுமா? இதை செய்யுங்க!
இந்நிலையில் தமிழக முதல்வரிடம் பொதுமக்கள் புகார் அளிக்க வசதியாக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் புதிதாக தொடங்கப்பட்டுள்ளது. http://cmcell.tn.gov.in/ என்ற இணையதளத்தில் மக்கள் புகார் அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் அளிக்கும் புகார் குறித்து எடுக்கப்பட்ட நடவடிக்கை பற்றியும் இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments