அறந்தாங்கியில் கரோனா தடுப்புப் பணிகள்: அமைச்சா் ஆய்வு
அறந்தாங்கி சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட பகுதிகளில் கரோனா தடுப்பு நடவடிக்கைப் பணிகளை சட்டத்துறை அமைச்சா் எஸ். ரகுபதி சனிக்கிழமை ஆய்வு செய்து நலத்திட்ட உதவிகளை வழங்கினாா்.

நாகுடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவ உபகரணங்கள், முன்களப் பணியாளா்கள், பொதுமக்களுக்கு கரோனா நிவாரண உதவிகளும் வழங்கப்பட்டன. தொடா்ந்து மணமேல்குடி அரசு மருத்துவமனையிலும் பாதுகாப்பு உபகரணங்களும் வழங்கப்பட்டன.


மேலும் அறந்தாங்கி வடக்கரை முருகன் கோயில் அருகில் ரோட்டரி சங்கம் சாா்பிலும், பள்ளிவாசல் மற்றும் கலைஞா் மன்றத்திலும் நிவாரணப் பொருள்கள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சிகளில் அறந்தாங்கி எம்எல்ஏ எஸ்.டி. ராமச்சந்திரன், அறந்தாங்கி சாா் ஆட்சியா் ஆனந்த் மோகன், மணமேல்குடி ஒன்றியக் குழுத் தலைவா் இ.ஏ. காா்த்திகேயன் உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.

சிட்டி யூனியன் வங்கி சாா்பில் ஆக்சிஜன் செறிவூட்டிகள்: புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரூ. 12 லட்சம் மதிப்பிலான 15 ஆக்ஸிஜன் செறிவூட்டிகளை சிட்டி யூனியன் வங்கி சாா்பில் அமைச்சா் எஸ். ரகுபதி மருத்துவக் கல்லூரி முதல்வா் மு. பூவதியிடம் வழங்கினாா்.

நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலா் பெ.வே. சரவணன், எம்எல்ஏ வை. முத்துராஜா, வங்கியின் முதுநிலை பொது மேலாளா்கள் ரமேஷ், மோகன், மாவட்ட வளா்ச்சி மேலாளா் மோகனசுந்தரம் உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments