புதுக்கோட்டையில் இந்திய மருத்துவ சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
புதுக்கோட்டையில் இந்திய மருத்துவ சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

நாட்டில் டாக்டர்கள், மருத்துவமனை பணியாளர்கள், செவிலியர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதை கண்டித்தும், அவர்களுக்கு உரிய பாதுகாப்பு சட்டம் இயற்ற வலியுறுத்தியும் தேசிய எதிர்ப்பு தினமாக கடைப்பிடித்து கருப்பு பட்டை அணிந்து ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என இந்திய மருத்துவ சங்கம் அறிவித்திருந்தது.


அதன்படி புதுக்கோட்டையில் இந்திய மருத்துவ சங்க கிளை அலுவலகம் முன்பு நேற்று டாக்டர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் கருப்பு பட்டை அணிந்தும், கோரிக்கைகள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியும் கோஷமிட்டனர்.
கலெக்டரிடம் மனு
ஆர்ப்பாட்டத்திற்கு இந்திய மருத்துவ சங்க புதுக்கோட்டை கிளை தலைவர் டாக்டர் சலீம் தலைமை தாங்கினார். செயலாளர் நவரத்தினசாமி, பொருளாளர் ராஜா உள்பட டாக்டர்கள் கலந்து கொண்டனர். மேலும் கோரிக்கைகள் அடங்கிய மனுவை கலெக்டர் கவிதா ராமுவிடம் சங்க நிர்வாகிகள் வழங்கினர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments