இந்தியாவில் கொரோனா 3-வது அலை எப்படி இருக்கும்; ஓராண்டு நீடிக்குமா? - நிபுணர்கள் விளக்கம்




பிரபல செய்தி நிறுவனமான ராய்ட்டர்ஸ், இந்தியாவில் கொரோனா 3-வது அலை எப்படி இருக்கும் என்பது தொடர்பாக உலகெங்கிலும் உள்ள சிறந்த சுகாதார நிபுணர்கள், டாக்டர்கள், விஞ்ஞானிகள் மற்றும் தொற்றுநோயியல் நிபுணர்கள் 40 பேரிடம் கருத்து கேட்டது.


அதன்படி, இந்தியாவில் கொரோனா 3-வது அலை அக்டோபர் மாதத்தில் வீசக்கூடும் என பெரும்பாலானோர் கூறியுள்ளனர். சிலர் ஆகஸ்டு, செப்டம்பர் மாதத்தில் வரக்கூடும் என தெரிவித்துள்ளனர்.

ஆனால் 2-வது அலையை விட 3-வது அலை மத்திய, மாநில அரசுகளால் திறம்பட கையாளப்படும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர். தடுப்பூசி போட்டவர்கள் எண்ணிக்கை கணிசமான அளவு அதிகரித்துவிடும் என்பதால் இயற்கையாகவே பொதுமக்களிடத்தில் நோய் எதிர்ப்பு சக்தி ஏற்பட்டுவிடும் என்று டெல்லி எய்ம்ஸ் ஆஸ்பத்திரி இயக்குனர் டாக்டர் ரந்தீப் குலேரியா தெரிவித்துள்ளார்.

3-வது அலை, 18 வயதுக்கு உட்பட்டவர்கள் மீது அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் என கூறப்பட்டு வருவதில் விஞ்ஞானிகள் மாறுபட்ட கருத்தை தெரிவித்துள்ளனர். 40 பேரில் 14 பேர், ஆபத்து பொதுவானதுதான் என கூறியுள்ளனர். மேலும் இந்த கொரோனா அச்சுறுத்தல் குறைந்தது ஓராண்டு நீடிக்கும் என 30 பேர் கருத்து தெரிவித்துள்ளனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments