புதுக்கோட்டை அரசு பணிமனையில் பஸ்கள் பராமரிப்பு பணிகள் தீவிரம்
தமிழகத்தில் கொரோனா 2-வது அலையின் பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளன. கடந்த மே மாதம் 10-ந் தேதி முதல் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு தளர்வுகளுடன் தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில் இன்றுடன் (திங்கட்கிழமை) முடிவடைய இருந்த ஊரடங்கு மேலும் ஒரு வாரத்திற்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. ஆனால், மேலும் பல தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. தொற்று பாதிப்பை வகைப்படுத்தி மாவட்டங்களை பிரித்து தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. அந்தவகையில் புதுக்கோட்டை மாவட்டத்திற்கு கூடுதல் தளர்வுகள் இன்று முதல் அமலுக்கு வருகிறது. இதில் ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட கடைகள் திறப்பின் நேரம் அதிகப்படுத்தப்பட்டுள்ளது.  ஊரடங்கின் காரணமாக புதுக்கோட்டை மாவட்டத்தில் பஸ்கள் இயக்கப்படாததால் ஆங்காங்கே பணிமனையில் பஸ்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. பஸ்களை இயக்குவது குறித்து எந்த நேரத்திலும் அறிவிப்பு வரலாம் என்பதால் புதுக்கோட்டையில் புதிய பஸ் நிலையம் அருகே உள்ள அரசு போக்குவரத்து கழக பணிமனையில் பஸ்கள் பராமரிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இதேபோல அறந்தாங்கி-பட்டுக்கோட்டை சாலையில் உள்ள அரசு பணிமனையில் பஸ்கள் சுத்தப்படுத்தப்பட்டு பணிமனைக்கு வெளியே தயார் நிலையில் வைக்கப்பட்டு இருந்தன. ஆனால் தமிழக அரசு 4 மாவட்டங்களுக்கு மட்டுமே 50 சதவீத பயணிகளுடன் பஸ்களை இயக்க அனுமதித்து உள்ளதால் டிரைவர்கள், கண்டக்டர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments