புறா வளர்க்க சேர்த்த பணத்தில் உணவு வாங்கி ஆதரவற்றோர்களுக்கு வழங்கும் சிறுவர்கள் முத்துப்பேட்டையில் பகுதி மக்கள் பாராட்டு
திருவாரூர் மாவட்டம். முத்துப்பேட்டையை சேர்ந்த சிறுவர்கள் அஸ்பர் அல்கவ்ஷர்(வயது13), ஜாவித் ரஹ்மான்(12), ஷாஜித் அகமது(12) ஆகிய மூவரும் நண்பர்கள். அதேபகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 9 மற்றும் 7ம் வகுப்புகள் படித்து வருகின்றனர்.

ஊரடங்கு காரணமாக வீட்டிலேயே இருந்து வரும் இவர்கள் புறாக்களை வளர்த்து வருகின்றனர். புறாக்களை பாதுகாக்க பெட்டி (கூண்டு) அடிப்பதற்கு பணம் சேர்த்து வந்தனர். இந்நிலையில் ஊரடங்கு காலத்தில் உணவு இன்றி தவிப்பவர்களுக்கு தன்னார்வலர்கள் உணவு கொடுப்பது போல் நாமும் கொடுக்க வேண்டும் என்று நினைத்த இந்த 3 சிறுவர்களும் புறாக்களுக்கு பெட்டி தயார் செய்ய சேமித்த பணத்தில் உணவு வாங்கி கொரோனா விதிமுறைகளை கடைபிடித்து முத்துப் பேட்டை கடைத்தெருவில் சுற்றித்திரிந்த ஆதரவற்றோர் மற்றும் மனநலம் பாதித்தவர்களுக்கு வழங்கினர்.

இதுகுறித்து சிறுவர்கள் கூறுகையில்,

இன்று 10 பேருக்கு உணவு வாங்கி கொடுத்தோம். இன்னும் பணம் இருந்திருந்தால் தண்ணீர் பாட்டிலும் வழங்கி இருப்போம். இதேபோல் பணம் சேர்த்து அதிகமான நபர்களுக்கு உணவு, தண்ணீர், மாஸ்க் வாங்கி கொடுக்க வேண்டும் என்று முடிவு செய்து இருக்கிறோம் என்றனர்.

சிறுவர்களின் இந்த செயல் சமூக வலைத்தளத்தில் பரவி பாராட்டுகள் குவிந்து வருகிறது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments