ஆதார் எண்ணை பான் கார்டுடன் இணைப்பதற்கான காலக்கெடு மீண்டும் நீட்டிப்பு
ஆதார் எண்ணை பான் கார்டுடன் இணைப்பதற்கான காலக்கெடு செப்டம்பர் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஜூன் 30 வரை இணைப்புக்கான அவகாசம் கொடுக்கப்பட்ட நிலையில் தற்போது செப்டம்பர் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 


ஆதார் எண்ணை பான் கார்டுடன் இணைக்க தவறினால் பயனர்களின் பான் கார்ட் முடக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது. 

நாடாளுமன்றத்தில் 2021 நிதி மசோதாவில் மேற்கொள்ளப்பட்ட திருத்தத்தின் அடிப்படையில் ஆதார் எண்ணை பான் கார்டுடன் இணைக்க தவறும் பயனர்களிடமிருந்து அபராதம் வசூலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.  கொரோனா பரவலை கருத்தில் கொண்டு அரசு கால நீட்டிப்பு செய்துள்ளதாக தெரிகிறது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments