கோவின் இணையத்தில் பாஸ்போர்ட்டை இணைத்து வெளிநாடு செல்பவர்கள் தடுப்பூசி செலுத்திய சான்றிதழ் பெறலாம்: சுகாதாரத்துறை தகவல்




வெளிநாடு செல்பவர்கள் கோவின் இணையதளத்தில் பாஸ்போர்ட்டை இணைத்து தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றிதழை பெற்றுக்கொள்ளலாம் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.  வெளிநாடு செல்பவர்கள் தடுப்பூசி செலுத்தி இருந்தால் மட்டுமே பயணிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் உலக சுகாதார அமைப்பால் அங்கீகரிக்கப்பட்ட கோவிஷீல்டு தடுப்பூசியை செலுத்துவதில் வெளிநாடு செல்பவர்கள் முக்கியத்துவம் அளித்து வருகின்றன. அந்த வகையில் 2 டோஸ் தடுப்பூசியும் செலுத்திய பிறகு வேலைவாய்ப்பு மற்றும் கல்வி அடிப்படையில் வெளிநாடு செல்பவர்களுக்கு தேவையான அனைத்து நடவடிக்கைகள் மத்திய அரசின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.



குறிப்பாக, வெளிநாடு செல்பவர்கள் மட்டும் முதல் தவணை தடுப்பூசி செலுத்தி 28 நாட்களுக்குப் பிறகு இரண்டாவது தவணை கோவிஷீல்டு தடுப்பூசியை செலுத்திக் கொள்ளலாம் என வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, இரண்டு தவணைத் தடுப்பூசியும் செலுத்தி கொள்ளும் நபர்கள் கோவின் செயலியில் தங்களுடைய பாஸ்போர்ட்டை பதிவேற்றம் செய்வதன் மூலமாக கொரோனா தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றிதழை பெற்றுக்கொள்ளலாம் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments