விண்ணப்பங்கள் மீது உடனடி நடவடிக்கை- மின் இணைப்புகளை 3 நாட்களில் வழங்க உத்தரவு




உடனடியாக மின் இணைப்பு வழங்கும் நிலையில் உள்ள விண்ணப்பங்களுக்கு 3 நாட்களில் மின்இணைப்பு வழங்க வேண்டும் என மின்வாரியம் உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக, மின்வாரியத்தின் பகிர்மானப் பிரிவு இயக்குநர், அனைத்து தலைமைப் பொறியாளருக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:

புதிதாக தாழ்வழுத்த மற்றும் உயரழுத்த மின் இணைப்புகளுக்கு இணைய வழியில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என்ற விதிகட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மின்இணைப்பு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ்பெறப்பட்ட ஏராளமான உயரழுத்த,தாழ்வழுத்த மின் இணைப்பு விண்ணப்பங்கள் மீது பல்வேறு நிலைகளில் எவ்வித நடவடிக்கையும்எடுக்காமல் நிராகரிக்கப்பட்டுள் ளன.

எனவே, தாழ்வழுத்த பிரிவின் கீழ் பெறப்பட்ட உடனடி மின் இணைப்பு வழங்கக் கூடிய நிலையில் உள்ள விண்ணப்பங்கள் மீது 3 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்கவேண்டும். அல்லது மின் இணைப்புவழங்க வேண்டும். பின்னர், இதுகுறித்த அறிக்கையை வணிகப் பிரிவு தலைமைப் பொறியாளருக்கு அனுப்பி வைக்க வேண்டும் என அனைத்து தலைமை மற்றும் கண்காணிப்புப் பொறியாளர்கள் அறிவுறுத்தப்படுகின்றனர்.

இவ்வாறு சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments