மீமிசலுக்கு வந்த அரசு பேருந்துகள்! பொதுமக்கள் வியாபாரிகள் மகிழ்ச்சி.!!
தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் பேருந்து போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டது. தற்போது தொற்று பரவல் குறைந்து வருவதால், கோவை, சேலம் உள்ளிட்ட 11 மாவட்டங்களைத் தவிர, பிற இடங்களில் பேருந்து சேவை தொடங்க அரசு அனுமதி அளித்தது.  கொரோனா பொதுமுடக்கத்தில் அளிக்கப்பட்டுள்ள கூடுதல் தளர்வுகளை தொடர்ந்து கூடுதலாக 23 மாவட்டங்களுக்கு இடையே பொதுப் போக்குவரத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது
தமிழக அரசின் வழிகாட்டுதல்படி 50 சதவீத பயணிகளுடன் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள கடற்கரை நகரமான மற்றும் முக்கிய சந்திப்பு பகுதி மீமிசல் ஆகும்.இந்த வழிதடத்தில் பட்டுக்கோட்டை, அறந்தாங்கி, ,தொண்டி ,தேவகோட்டை நான்கு சாலை பிரிந்து செல்கிறது. இந்நிலையில் நேற்று 28-06-2021 திங்கள்கிழமை காலை முதல் அறந்தாங்கி,புதுக்கோட்டை,
இராமநாதபுரம் ,கட்டுமாவடிக்கு மீமிசல் வழியாக அரசு பேருந்து இயக்கப்பட்டு வருகிறது. கடந்த 48 நாட்களாக பேருந்து இயங்காத நிலையில் நேற்று 50 சதவீத பயணிகளுடன் பேருந்து இயக்கப்பட்டு வருகிறது.
பேருந்து இருக்கைகளில் ஒருவர் மட்டுமே அமர்ந்து செல்ல அனுமதிக்கபடுவர் என்றும், கூட்டமாக பேருந்தில் ஏற அனுமதியில்லை என நடத்துனரால் தெரிவிக்கப்பட்டதுடன், பயணிகள் கண்டிப்பாக முககவசம் அணிந்து வர வேண்டும் என்றும்  முககவசம் இன்றி பேருந்துகளில் பயணிக்க அனுமதி மறுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.முதல் நாள் என்பதால் போதிய பயணிகள் இன்றி காணப்பட்டது.

மீமிசலுக்கு பேருந்து வசதி கிடைக்கப்பெற்ற தகவலை அடுத்து வியாபாரிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments