மின்வெட்டை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்
அறந்தாங்கி அருகே  ராஜேந்திரபுரம் ஊராட்சி பகுதியில் கடந்த சில தினங்களாக  அடிக்கடி மின்வெட்டு ஏற்பட்டு வருகிறது. இதனால் அப்பகுதி மக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். இந்தநிலையில் நேற்றும் மின்தடை ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதி மக்கள்  அறந்தாங்கி-பட்டுக்கோட்டை சாலையில் திரண்டு மறியலில் ஈடுபட்டனர்.


இது குறித்து தகவல் அறிந்த துணை போலீஸ் துணை சூப்பிரண்டு ஜெயசீலன், துணை மின் பொறியாளர் முத்துராமலிங்கம் ஆகியோர் மறியலில் ஈடுபட்ட பொது மக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். இது குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என அவர்கள் உறுதி அளித்தையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர். 

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments