ஏடிஎம்களின் பணப் பரிவர்த்தனைக்கான கட்டணம் உயர்வு - ஆகஸ்ட் 1 முதல் அமல்






ஏடிஎம்களின் பணப் பரிவர்த்தனைக்கான கட்டணம் உயர்வு - ஆகஸ்ட் 1 முதல் அமல்
  
நம் வங்கி சாராத மாற்று வங்கியின் ஏடிஎம் மையத்திலோ அல்லது ஏடிஎம் ஆபிரேட்டர்களின் மையத்திலோ பணம் எடுப்பதற்கான கட்டணத்தை உயர்த்த இந்திய ரிசர்வ் வங்கி அனுமதி அளித்துள்ளது. இந்த புதிய உத்தரவு வரும் ஆகஸ்ட் 1 முதல் அமலுக்கு வரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

வாடிக்கையாளர்களிடம் இருந்து வசூலிக்கப்படும் கட்டணத்தில் 15 ரூபாயை தற்போது Interchange கட்டணமாக மாற்று வங்கி அல்லது ஏடிஎம் ஆப்பிரேட்டார்களுக்கு சம்மந்தப்பட்ட வங்கிகள் கட்டணமாக கொடுத்து வருகின்றனர். இதனை இனி வணிகள் 17 ரூபாய்க கொடுக்க வேண்டும் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. அதே போல பணம் சாராத ஏடிஎம் பரிவர்த்தனைக்கான கட்டணம் 5 ரூபாயிலிருந்து 6 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. 

மாற்று வங்கி ஏடிஎம்களில் மூன்று இலவச பரிவர்த்தனைகளுக்கு பிறகு இந்த கட்டணம் வசூலிக்கப்படும். மெட்ரோ எல்லைக்குள் வராத பகுதிகளில் இந்த எண்ணிக்கை ஐந்து இலவச பரிவர்த்தனையாக உள்ளது. ஏடிஎம் பராமரிப்பு செலவை கருத்தில் கொண்டு இந்த கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. சில வங்கிகள் குறிப்பிட்ட இலவச பரிவர்த்தனைக்கு மேல் தங்கள் ஏடிஎம் மையத்தில் தங்கள் வங்கியின் டெபிட் கார்டுகளை பயன்படுத்தி பணம் எடுக்கும் வாடிக்கையாளர்களிடம் கூட பணம் வசூலிக்கும் நடைமுறை வழக்கத்தில் உள்ளது.  

தற்போது அனுமதிக்கப்பட்டுள்ள இலவச ஏடிஎம் பண பரிவர்த்தனையை கடந்தவுடன் 20 ரூபாய் சம்மந்தப்பட்ட வாடிக்கையாளரிடம் இருந்து வசூலித்து வருகிறது வங்கி. இதனை 21 ரூபாயாக வரும் வரும் ஜனவரி 1 முதல் இனி வங்கிகள் வசூல் செய்ய உள்ளது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments