கட்டுமான பொருட்களின் விலையை குறைக்க கோரிக்கை!



புதுக்கோட்டை மாவட்டம்  கிழக்கு கடற்கரை சாலை பில்டர்ஸ் ஆசியோசியன் கட்டுமான பொறியாளர்கள் சங்கத்தை சேர்ந்த பொறியாளர் முகமது ரபீக்  B.E அவர்கள் கூறியதாவது:-

இன்றைய கொரோனா காலக்கட்ட இக்கட்டான சூழ்நிலையில் கட்டுமான பொருட்களான சிமெண்டு, கம்பி, ஜல்லி, எம்சாண்ட், பி.வி.சி. பைப்புகள், செங்கல் உள்ளிட்டவைகளின் விலை அதிகரித்துள்ளது.

இதனால் கட்டுமான தொழிலாளர்கள், பொறியாளர்கள், வீடு கட்டுபவர்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.

மீமிசல் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் விவசாயம் மற்றும் கட்டுமான தொழிலை நம்பி வாழ்கிறார்கள் அவர்கள் வாழ்வாதாரம் அரசங்காம் கையில் தான் உள்ளது.

விலை அதிகரிப்பால் இனி வரும் காலங்களில் புதிய வீடுகள் கட்டுவோர் ஏற்கனவே வீட்டை புதுப்பித்து கட்டுவோர் கடும் பாதிப்பை ஏற்படுத்தும்.

எனவே கட்டுமான பொருட்களின் விலையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர தமிழக முதல்-அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments