சுதந்திர தின விழாவில் சமூக சேவகர் விருது பெற விண்ணப்பம் வரவேற்பு! நாளை 25-ந் தேதி கடைசி நாள்: கலெக்டர் தகவல்!புதுக்கோட்டை மாவட்டத்தில் பெண்களுக்கு சிறப்பாக சேவை புரிந்த நிறுவனத்துக்கும், சமூக சேவகர்களுக்கும் 2021-ம் ஆண்டு சுதந்திர தின விழாவின் போது தமிழக முதல்-அமைச்சரால் விருது வழங்கப்பட உள்ளது.

அதற்கு தமிழ்நாட்டை பிறப்பிடமாக கொண்டவர், 18 வயதிற்கு மேற்பட்டவராக இருத்தல் வேண்டும். குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் சமூகநலன் சார்ந்த நடவடிக்கைகள் பெண் குலத்திற்கு பெருமை சேர்க்கும் வகையிலான நடவடிக்கை மொழி, இனம், பண்பாடு, கலை, அறிவியல், நிர்வாகம் போன்ற துறைகளில் மேன்மையாக பணிபுரிந்து, மகளிர் நலனுக்கு தொண்டாற்றும் வகையில் தொடர்ந்து பணியாற்றும் சமூக சேவகர் மற்றும் சமூக சேவை நிறுவனங்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

சமூக சேவை நிறுவனம் அரசு அங்கீகாரம் பெற்ற நிறுவனமாகவும் இருத்தல் வேண்டும். இணைப்பு படிவம் தமிழ் (வானவில் அவ்வையார்) மற்றும் ஆங்கிலம் (ஏரியல்) பான்ட் சைஸ் 12 என்ற அளவில் தட்டச்சு செய்து முழுமையாக பூர்த்தி செய்யப்பட்டிருக்க வேண்டும். விண்ணப்பதாரர் பெண்களின் முன்னேற்றத்திற்காக சிறப்பாக சேவை புரிந்த விவரம் 1 பக்க அளவில் தட்டச்சு செய்து அனுப்ப வேண்டும். 

விண்ணப்பதாரரின் கருத்துரு-4, (தமிழ் 2 மற்றும் ஆங்கிலம் 2) மற்றும் பாஸ்போர்ட் சைஸ் போட்டோ உடன் விண்ணப்பிக்க வேண்டும். 

மேற்குறிப்பிட்டுள்ள விதிமுறைகளின்படி உரியமுறையில் பெறப்படாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும். 

விண்ணப்ப படிவங்கள் புதுக்கோட்டை கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட சமூகநல அலுவலகத்தில் பெற்றுக் கொள்ளலாம். 

விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் வருகிற 25.06.2021 தேதி மாலை 5 மணி ஆகும். மேலும் விவரங்களுக்கு 04322-222270 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம். 

மேற்கண்ட தகவலை கலெக்டர் கவிதா ராமு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments