ஜமாபந்தி நிகழ்ச்சியில் பொது மக்களிடமிருந்து ஆன்லைன் மூலம் பெறப்படும் கோரிக்கை மனுக்களின் மீது உரிய நடவடிக்கை: அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவு!புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் 1430 ஆம் பசலி ஆண்டு வருவாய் தீர்வாய கணக்குகள், வருவாய் தீர்வாயம் குறித்த ஜமாபந்தி நிகழ்வு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கவிதா ராமு, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் (22.06.2021) அன்று  நடைபெற்றது. இந்நிகழ்வுக்கு பின் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது.

புதுக்கோட்டை மாவட்டத்தில், உள்ள அனைத்து வருவாய் கிராமங்களிலும் கிராம நிர்வாக அலுவலர்களால் பராமரிக்கப்பட்டு வரும் வருவாய் கிராமக்கணக்குகளை ஒவ்வொரு வருடமும் அந்தந்த பசலியின் (வருடம்) இறுதி மாதத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர், மாவட்ட வருவாய் அலுவலர், மற்றும் துணை ஆட்சியர்களால் தணிக்கை செய்யப்பட்டு வருகிறது. அதேபோன்று, நடப்பு பசலி (1430) வருடத்திற்கு புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று முதல் புதுநகர் உள்வட்ட கிராம கணக்குகள் தணிக்கை செய்யப்பட்டு வருகிறது. 

அதன் அடிப்படையில் இன்றையதினம் கந்தர்வக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஜமாபந்தி நிகழ்வு பார்வையிட்டு ஆய்வு செய்யப்பட்டது. இதில் மஞ்சப்பேட்டை, புதுநகர், அரியாணிப்பட்டி, புனக்குளம், பழைய கந்தர்வக்கோட்டை, பிசானத்தூர், வீரடிப்பட்டி, முதுகுளம், குளத்தூர், பெரியகோட்டை, புதுப்பட்டி, நடுப்பட்டி, நம்புரான்பட்டி, சேவியர்குடிக்காடு ஆகிய பகுதிகளுக்கான ஜமாபந்தி நடைபெற்றது. 

மேலும் 23.06.2021 அன்று கல்லாக்கோட்டை உள்வட்டத்திற்கும், 24.06.2021 அன்று கந்தர்வக்கோட்டை உள்வட்டத்திற்கும் வருவாய்த்தீர்வாயம் நடைபெற உள்ளது. இந்த ஜமாபந்தி நிகழ்ச்சியில் பொது மக்களிடமிருந்து ஆன்லைன் மூலம் பெறப்படும் கோரிக்கை மனுக்களின் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கவிதா ராமு, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார்.
 
இந்நிகழ்வின் போது வட்டாட்சியர் புவிஅரசன், மாவட்ட ஆட்சியரக நிர்வாக மேலாளர் செந்தமிழ்குமார் உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments